Thursday, 31 July 2014

தமிழும் சித்தர்களும்

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது. இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

“எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்” என்று திருத்தக்க தேவரின் “சீவக சிந்தாமணி” சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறதுகம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி!

இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்தபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

கொரிய இளவரசி தமிழச்சி :

கி.மு 48ஆம் காலகட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயதான பேரழகி தன் கனவில் கண்ட இளவரசனை காதலித்து அவரை திருமணம் செய்துகொள்ள எண்ணினாள். அவளின் ஆசை படி அந்த பெண்ணை அவள் பெற்றோர்கள் மரக்கலத்தில் ஏற்றி கொரியா அனுப்பிவைக்க அவள் கொரியாவையும் அந்நாட்டு மன்னரையும் அடைந்தாள்.

இளவரசியின் சொந்த ஊர் ‘ஆயுத்த’ அல்லது ‘ஆயித்த’ என்றும் சொல்கிறார்கள். அந்த பெயர் அயோத்தி என்ற பெயரை ஒத்து இருப்பதால் ஆயித்தி தான் அவரின் பூர்வீகம் என்றும் கருதப்படுகிறது. அந்த இளவரசியில் பெயர் ஹியோ ஹவாங் ஒக்கே. ஹியோ ஹவாங் ஒக்கே இளவரசி ஒரு தமிழ் பெண் என்றவுடம் அதை நம்ப மனம் மறுத்தது. பின்பு மெல்ல மெல்ல நம்பத்தொடங்கினேன் அவர்களில் கலாச்சாரத்தையும் அவர்கள் மொழியையும் பார்த்து.

தமிழகளை போல கொரிய நாட்டினரும் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தான் அழைக்கிறார்களாம். ‘புதியது’ என்பதை ‘புது’ என்கிறார்களாம். ‘நீ திரும்ப வா’ என்பதை ‘நீ இங்கே பா’ என்கிறார்களாம்.
‘உயரம்’ என்பதை ‘உரம்’ என்கிறார்கள். நாம் சொல்லும் அச்சச்சோ! அப்பாடா.. வெல்லாம் அங்கே சகஜமாம். அவர்களது உணவு முறையும் தமிழர்களை போல் அரிசி சாதம் தான். ஊறுகாய் இல்லாது உணவே கிடையாது. இன்று தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாம். தமிழர்கள் அமைக்கும் குடிசைகள் போல தான் கொரிய நாட்டினரும் குடிசைகள் அமைப்பார்கலாம்.
தமிழ் இளவரசியின் சமாதி அங்கு இன்னமும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா தளமாக உள்ளது. அதே சமயம் நம் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் சமாதிகள் எங்கு போனதென்றே நமக்கு தெரியாது. தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படு, பல சாதனைகள் செய்த தமிழர்களை மறந்துவிடாதே!

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது.

மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார்.

அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?


தமிழும் சித்தர்களும்!!!

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது

இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.

தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது.

எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர்.

முதலாமவர் O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். 

சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.

Elaryan 4404-3836 BC – தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் – ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் – அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது

Eylouka 3836 – 3932 BC (QUEEN) – தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.

Kam 2713 – 2635 BC – தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.

Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் – அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி – சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.

Manturay 2180- 2145 BC – தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர – மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

Azagan 2085 – 2055 BC – தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.

Ramen Phate 2020-2000 BC – தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.

Ramesses I 1295-1294 BC – தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் – சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.

Wan Una 2000 BC – தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் – சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC – தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் – தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர்.இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு.

எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC – தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.

Piori 2000 – 1985 BC – தமிழில் பய் ஓரி > வ

மேனேஜர் vs பியூன்

காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது . ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.

நாலாவது நாள்... பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவ லகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை. பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர் கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் துளிர்விட்டுப்ப ன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது. அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும் , சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.

காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக் கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டு பிடித்துவிட்டார்கள். புலியை அடித்துத் துவைத்து,
கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி : உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!

Tuesday, 29 July 2014

இராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு

இராஜேந்திரன் பற்றிய '25'

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்,பிரான்சின் நெப்போலியன்,கலிங்க மன்னர் அசோகர்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன்,அரசியல்,சாணக்கியம்,கலை,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்,இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன்,இந்த 'இராஜேந்திர சோழன்'.



1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான்.

2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே.

3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மேற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும்,
கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா, காலடியில் வைத்து இருந்தான்.சற்று இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவை பட்டு இருக்கும் , மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்கெளை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் மன்னனாவான்.

4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார்.

5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறுமுனைக்கு கொண்டு சென்றனர்.

6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் நடந்தே கொண்டுவரப்பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க மன்னன் 'மகிபாலனை' பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் படை.

7.கங்கையில கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை
உருவாக்கியதால் அது 'கங்கை கொண்ட சோழபுரம் ' என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது.

8.கங்கை படையெடுப்பின் சந்தர்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து ராஜாதிராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான்.சோழன் வருவதை கேள்வி பட்ட பாண்டியன் தனது மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடினான்.இதுவே இந்நாளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 'மீன்சுருட்டி' என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு செவிவழி செய்தியாகும்.

9.முகமது கஜினி அதிஉத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற 'சோமநாதபுரம்'.

10.பெரும் மனித உழைப்பை கொண்டு,நீர் பாசனத்திற்காக இந்த நாட்டிலே மிகப்பெரிய ஏரியை,25கிமீ நீளமும் 6.5 கிமீ அகலமும் கொண்ட ஏரியை உருவாக்கினான்.இதனை கங்கை கொண்டு புனித மாக்கப்பட்டதால் இது 'சோழகங்கம்'எனப்பட்டது.இது இப்பொது மண்ணால் மூடப்பட்டுள்ளது , 'பொன்னேரி' எனப்படுகிறது.

11.ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்களின் எண்ணிக்கை '32'.இதில் கங்கை கொண்ட சோழ புறம், ஈழம்,ஆந்திரா,கர்னாடக ஆகிய இடங்களில் கட்டிய கோவில்களும் அடங்கும்.

12.வாயுக் கடவுளுக்காக ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள புகழ் வாய்ந்த 'காளஹஸ்தி' திருக்கோயில் இவன் ஆட்சியில் தான் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, முழுவடிவம் பெற்றது.

13.பொன்னியின் செல்வன் படிச்சவங்க எல்லாம் வந்தியத்தேவன ஒரு கதா பாத்திரமா நினைச்சி வாழ்ந்துஇருப்பீங்க.ஆம்,அவன்தான் இவனுடைய ஆட்சியிலும் முதன்மை தளபதியாக விளங்கியவன் தனது அத்தை கணவன் 'வல்லவராயன் வந்தியத்தேவன்'.

14.தனது மகன் ராஜாதிராஜனுக்கு இளம் வயதிலே முடி சூட்டப்பட்டு,தந்தையும்மகனும் '26' ஆண்டுகள் சேர்த்து ஆட்சி புரிந்தனர்.இவனது ஆட்சியில் பின்னாளில் ராஜாதிராஜனே பல போர்களுக்கு தலைமை புரிந்தான்.

15.வட இந்தியா,இலங்கை, பாரசீகம்,அரேபியம்,சீனா,ரோம்,கிழக்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்து இருந்தான்.

16.கடார படை யெடுப்பினை பற்றி நிலவும் பல கருத்துகளில் ஒன்றாக, அங்கு வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டுவந்த தமிழர்களுக்கு விசய பேரரசால் வந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,தனது செல்வாக்கினை,தனது படை வலிமையை அங்கு காட்டும் பொருட்டு ,தனது படையெடுப்பினை நிகழ்த்தி வெற்றி கொண்டான்.இவன் வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக கம்போடிய மன்னன் தமிழன் சூரிய வர்மன் ராஜேந்திர சோழனின் தாய் பெயரில் கம்போடியாவில் கோவிலை ஏற்படுத்தினான்.

17.ராஜேந்திரன் தன்னை சுற்றி அனைத்து போர் திறன்களும் அறிந்த கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒர் போர் குழுவினரை தன்னுடைய நலனுக்கும்,நாட்டின் நலனுக்கும் வைத்து இருந்தான்.எப்படி பிரபாகரனை சுற்றி ஒரு 'கரும்புலி' படை இருந்ததோ அது போல.இவர்கள் 'வேலைகாரப் படை' எனப்பட்டனர்.

18.கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்த இவனுடைய அரண்மனை மாளிகையின் பரப்பளவு 1.6 கிமீ.

19.மேலைசாளுக்கியர்களிடம் நிலவி வந்த கொடும்பகையினாளும், கீழை சாளுக்கியர் அவர்கள் வசம் செல்லாமல் இருப்பதற்கும் ,சாணக்கிய தனமாக கீழை சாளுக்கியரை தன் வசப்படுத்த தனது மகள் அங்கம்மாளை தனது தமக்கை மகன் கீழை சாளுக்கிய இளவரசன் ராஜ ராஜ அரியனிற்கு திருமணம் செய்து வைத்து ,பின்னாளில் அவனையே மன்னனாக்கி,மேலை சாளுக்கியருக்கு எதிராக மூன்று முறை பெரும்களம் கண்டு பெரும் வெற்றி கண்டான்.

20.அந்தமான் தீவில் மலை உச்சியில் ராஜேந்திரன் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும்.

21.ராஜேந்திர சோழனின் கப்பற்படை திறனை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு இந்திய கப்பற்படை பயிற்சி கப்பலுக்கு இந்திய அரசு TS Rajendra என்று பெயர் சூட்டியுள்ளது.

22.என்னதான் இது பொற்கால ஆட்சி என்று சொன்னாலும் குறைகள் இல்லாமல் இல்லை.இவனது ஆட்சியிலும் அடிமை முறை,தேவதாசி முறைகள் பின்பற்றபட்டது.சாதி கட்டமைப்புகள் இருந்தன,ஆனால் 'தீண்டாமை' இல்லை,பறையர்களுக்கும் நிலங்கள் சரியாக பங்கிட்டு கொடுக்கபட்டது.

23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் 'வெள்ளூர்' எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும் வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்களமன்னனிடம் கொடுத்துவிட்டு சேர நாடுக்கு தப்பி ஓடி விட்டான்.கடுங்கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்,ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரியாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்,இந்த சோழன்.

24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.தன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் அதே முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ,மொழியையோ யார் மீதும் தினிக்கவில்லை.

25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனிடம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமாதேவியும் உடன் இறந்தால்.பின்னாளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீரிணை கொடுத்து வந்தான்.

Monday, 7 July 2014

விதி

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-



1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை...இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

Thursday, 3 July 2014

நவீன இலக்கணம்

மலையும் மலையைச் சார்ந்த இடத்துக்கும்
என்ன பேருங்க டீச்சர்?
குவாரிகள்.

காடும் காடு சார்ந்த இடங்களுக்கு?
பிளாட்டுகள்.

வயலும் வயல் சார்ந்த இடங்களுக்கு?
எஞ்ஜினீயரிங் காலேஜஸ்.

கடலும் கடல் சார்ந்த இடங்களுக்கு?
இலங்கை.

பாலைன்னா?
ஐtடி கம்பெனிகள்.

தேங்க்யூ டீச்சர் ஆனா தமிழ்மிஸ் வேற மாதிரி சொல்லிக் கொடுத்தாங்களே?

- ரத்திகா.