Sunday, 7 April 2024

பாடல் வரிகள் : திங்கள் முடி சூடும் ஈசன்

குரல் : திருமதி. S. ஜானகி 

பாடல் வரிகள் :

திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..

தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..

கங்கையினை தலையில் கொண்டான் எப்போதுமே..

காத்து கருணையுடன் கதியருள்வான் தப்பாமலே..

(இசை)

இமையவனாய் உமை  விழியாய் விளங்கும் ஈசன்..

ராவணனின் மனச்செருக்கை அழித்த ஈசன்..

தமை இகழ்ந்த தட்ஷணையும் வீழ்த்தினானே..

அந்த தாண்டவ மூர்த்தியினை வாழ்த்துவோமே..

திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..

தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..

(இசை)

பிள்ளைக்கறி தின்றானை..

பிட்டுக்கு மண்  சுமந்தானை..

எல்லையில்லா விளையாட்டாய் நல்வரங்கள் அளித்தானை..

திரிகடன சுத்தியுடன் போற்றுவோமே..

அவன் திருநீற்றின் பெருமைதனை சாற்றுவோமே..

திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..

தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..

(இசை)

வெந்நீர் அணிந்தவனை..

வேதப்பொருள் ஆனவனை..

கண்ணப்பனுக்கு அருள் செய்ய காட்சிதந்த பெருமானை..

கொன்றை மலர் அணிந்தவனை பாடுவோமே..

அந்த நஞ்சை உண்ட நாயகனை நாடுவோமே..

திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..

தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..

கங்கையினை தலையில் கொண்டான் எப்போதுமே..

காத்து கருணையுடன் கதியருள்வான் தப்பாமலே..

காத்து கருணையுடன் கதியருள்வான் தப்பாமலே..

🙏🏻திருச்சிற்றம்பலம் 🙏🏻