ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
காலத்தை வென்று சரித்திரங்கள் பல படைத்த "கர்ணன்" திரைப்படத்தின் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடலை விரும்பாதோர் தமிழரே இல்லை எனலாம்.
இயற்கையின் தாயான கதிரவனைப் பற்றிய பாடலாதலால் அனைத்து மதத்தவராலும் ரசிக்கப்படுகிறது.
T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலக ச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடி, இனி இப்படி ஒரு பாடல் உலக வரலாற்றிலேயே அமையாது என்று எண்ணும் அளவுக்கு புகழ் பெற்றது.
இதனை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் லயிக்கும்; உடல் சிலிர்க்கும்; கண்கள் பனிக்கும்.
இந்த பாடலை தேடிக்கொண்டிருப்போர் பலர் இருப்பார்கள். ஆகவே youtube video link : http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU mp3 link : http://tamildada.com/karnan-songs/ பாடல் வரிகள் ஆகியவற்றை தமிழன் என்ற பெருமையுடன் பகிர்கின்றேன்.
இப்பாடலை இயற்றியது யாரோ?
ReplyDeleteகண்ணதாசன்
DeleteGreat Poet kannadasan
ReplyDeleteஇதனை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் லயிக்கும்; உடல் சிலிர்க்கும்; கண்கள் பனிக்கும். True!!!
ReplyDeleteஇந்த பாடல் வரிகளை கேட்டாலே போதும் மனம் புதிப்பித்து எழுந்து விடும்.
ReplyDelete