Thursday, 18 December 2014

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

பழங்காலத்து கோயில்கள் :  ஒரு அறிவியல் பூர்வமான அலசல்

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.



இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Friday, 31 October 2014

ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள் !!

பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார்.



இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.



ஸ்ரீரங்கத்தில் 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்து உள்ளனர். தற்போது மக்கள் தொகை 3 லட்சத்தை எட்டி உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.

இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.



கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.



கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.



ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.



ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.



ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

Thursday, 9 October 2014

தமிழன் என்றாலே பெருமை தான்


அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே...
விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்... !!

வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்.

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்....

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம.

Wednesday, 8 October 2014

கர்ணனின் வலிமை

கர்ணன் அர்ச்சுனன் இறுதி போரில் நடந்த பிரபலமிக்க சம்பவம் :

போரில் அர்ச்சுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம், 60 அடிகள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதே அர்ச்சுனனின் ரதம், கர்ணனின் தாக்குதலில் 2 அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.

உடனே கண்ணன், கர்ணனைப் பாராட்டினார். அர்ச்சுனன் கோபம் கொண்டு, கண்ணனைக் கேட்டான். "என் தாக்குதலில் கர்ணனின் ரதம் 60 அடிகள் நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் 2 அங்குலங்கள் நகர்ந்தற்க்கு அவனைப் பாராட்டுகிறீர்களே??? "

அதற்கு கண்ணன் "ஆம் அர்ச்சுனா, அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும், கர்ணனும் மட்டும்தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில், மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய நான் இருக்கிறேன், மூவுலகங்களும் என்னுள் அடக்கம். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியாய் அனைவராலும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறார்.

நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால், கர்ணனின் தாக்குதலில் ரதம், இரண்டு அங்குலங்கள் வரை  நகர்ந்துவிட்டது.

சற்று யோசித்து பார் உன் ரதத்தில் நானும் அனுமனும் இல்லையெனில் கர்ணன் செலுத்திய பாணத்திற்கு உன் ரதம் பூமியை விட்டே தூக்கி எறியப்பட்டிருக்கும்" என்றார்.

"தனித்திருந்தாலும் வலிமை மிக்கவன் கர்ணன்"

நேதாஜியும் நேருவின் துரோகமும்

(படித்ததை வேதனையோடு இங்கு பகிர்ந்து உள்ளேன்...)

நேதாஜியும் நேருவின் துரோகமும்...1.
_____________________________________

1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி அயோத்யாவுக்கு அருகில் இருக்கும் ஃபைஸாபாத் என்னும் நகரில் ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு சாது சுமார் 90 வயதில் தனது இறுதி மூச்சை விடுத்தார். அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த சாது வேறு யாரும் இல்லை, நேதாஜி என இந்தியமக்கள் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.

ஆனால் உலகம் முழுக்க பரப்பப்பட்ட செய்திகளின் மூலம் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஜப்பானில் இருந்து சோவியத் யூனியனுக்கு விமானத்தில் செய்த பயணத்தின் போது விமானவிபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பானின் செய்தி நிறுவனம் அறிவித்தது.

சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லருடன் சேர்ந்து சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சோவியத் யூனீயனில் சிறைபிடிக்கப்பட்டு வைத்திருந்ததாகவும் அங்கே தான் நேதாஜி மரித்ததாகவும் ஆதாரம் இல்லாத செய்திகள் கூட உண்டு.

ஜப்பானின் செய்தி நிறுவனத்தின் மூலம் இம்மாதிரி விமானவிபத்து செய்தியைப் பரவவிட்டுவிட்டு நேதாஜி தப்பித்துப் போய் எங்கோ மறைந்திருந்ததாகவும் பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இந்தியாவுக்கு வந்து ஒரு கர்ம யோகிபோல் மறைந்து வாழ்ந்து மறைந்தார் என்பதாகவும் அவர்தான் ஃபைஸாபாதில் மறைந்த சாது என்பதையும் பலர் அடித்துக்கூறினாலும் உண்மை என்ன என்பது தெரிந்தவர் யார் யார் தெரியுமா..?

இந்தியாவுக்கு நல்லது செய்வதாக நடித்து துரோகத்தையே செய்துவந்த நேருவும் அவரது பரம்பரையினரும் தான்,. உடனே நேருவுக்கு ஆதரவாக மறுப்புத் தெரிவிக்கும் பல புரட்சியாளர்கள் இங்கே வந்து கதறலாம். அல்லது தன் சுவற்றில் முழங்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

ஆதாரங்கள்…?

# 1954 ஆம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபின்னர் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முடிசூட்டிக்கொண்ட நேரு அப்போதும் சரி அதற்கும் முன்னரும் சரி.. எந்தவிதமான துயர அறிக்கையும் வெளியிடவில்லை. மாறாக இந்திய தேசிய காங்கிரஸ் நேதாஜியின் இறப்பை ஒரு சிறிய தீர்மாணத்தின் மூலம் காட்டிக்கொண்டுவிட்டு அமைதியானது. காரணம் நேரு காந்தி கூட்டணிக்கு நேதாஜியின் வளர்ச்சியும் வழிமுறைகளும் பிடிக்காமல் போனதுதான். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தே நேதாஜியை விரட்டியவர்கள் இந்த மனிதப்புனிதர்கள். அதன் பின்னர் தான் நேதாஜி ஃபார்வேர்ட் ப்ளாக் இயக்கத்தைத் தொடங்கினார் என்பது வேறு தகவல்.

# நேரு இந்தியாவின் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டபின்னர். தேசபக்தி இயக்கத்தினர் பலரின் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு 1956 ஆம் ஆண்டில் நவாஸ் கான் கமிட்டி என்னும் ஒரு கண் துடைப்புக் கமிட்டியை நேதாஜியின் மறைவு குறித்து விசாரிக்க அமைத்தது. ஆனால் பொய்யான நோக்கத்தில் அமைந்த அந்த கமிட்டியோ எந்த ஆணியையும் பிடுங்காமல் ஒதுங்கிக்கொண்டது. அதாவது ஜப்பானின் செய்தி நிறுவன அறிக்கையையே தனது முடிவாக அறிவித்து இந்தியர்களை முட்டாள்களாக்கிச் சென்றது, நேருவும் விரும்பியது அதைத்தானே..?

# பிறகு இந்திராகாந்தியின் ஆட்சியில் 1970 – 74 ஆண்டுகளில் ஜி டி கோஸ்லா கமிஷன் ( G.D. Khosla Commission ) அமைக்கப்பட்டு மீண்டும் ஒரு கண் துடைப்பு நாடகம் நடந்தது. இந்த கமிஷனும் முந்தைய கமிஷன் போலவே நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார் என்று ஃபைலகளை மூடிவிட்டு சிலகோடிகள் செலவுக் கணக்கைக் காட்டியது.

# 1986 இல் ஃபைஸாபாதில் இறந்த அந்த ஏழைச்சாதுவிடம் 23 டிரங்குப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் பல பொருட்கள் இருந்தன. ( அவற்றைப் பிறகு பார்ப்போம் ) அவை அந்த சாது நேதாஜியாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று சான்றுகள் காட்டினாலும் அதை விசாரிக்க 1999 ஆம் ஆண்டு முழுமனதுடன் அல்லாமல் நேதாஜியின் மீது பக்தி கொண்டவர்களின் பல போராட்டங்களின் அழுத்தத்தால் ஜஸ்டிஸ் எம் கே முகர்ஜியின் தலைமையில் தீவிர நேதாஜி ரகசியத் தேடல் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளின் தீவிர வீணடிப்பு காலத்துக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தனது வெள்ளை அம்பாசடர் காரில் சென்று எம் கே முகர்ஜி அந்த முகம் தெரியா சாதுவின் உடமைகளை ஆராயச்சென்றது. ( கால இடைவெளியைக் கணக்கிட்டுக்கொள்ளவும் )

# இதற்கிடையில் நேதாஜியின் மருமகள் லலிதா போஸ் ஓர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த தேடுதல் வழக்கின் கீழ் அந்த சாதுவிடம் இருந்த 23 ட்ரங்குப்பெட்டிகளின் உடைமைகளைப் பார்வையிட அனுமதிபெற்று பார்வையிட்டபோது அப்பெட்டிகளில் மொத்தம் 2673 பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. லலிதா போஸ் அந்த உடைமைகளில் இருந்த கடிதங்களில் இருந்த எழுத்துகளைக் கண்டு அது தனது தனது மாமாவின் கையெழுத்துகள் என்றும் இருந்த புகைப்படங்கள் சிலவற்றில் குடும்பப் படங்களும் இருப்பதாகவும் கூறியபோது, அவை ஏற்கப்படாமல் அந்த 2673 பொருட்கள் மீண்டும் 23 பெட்டிகளில் அடைக்கப்பட்டு மாவட்ட ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டது. ( இதில் இருக்கும் சில மர்மங்களை வரும் பதிவில் விபரமாகக் கூறுகிறேன். )

அடுத்த பாகத்தில் மீண்டும்…



நேதாஜியும் நேருவின் துரோகமும்...2..
____________________________________

ஃபைஸாபாதில் அந்த மர்ம சாதுவிடம் இருந்த 23 பெட்டிகளில் இருந்தவற்றில் முக்கியமானவை : 1. ஒரு ஜோடி ஜெர்மன் பைனாகுலர்கள்2. ஒரு கரோனா டைப் ரைட்டர்3. ஒரு பைப் ( புகையிலை பொருத்தி புகைக்கும் பைப் )4. ஒரு ரோலக்ஸ் வாட்ச் ( நேதாஜி எப்போதும் அணிவது )5. ஒரு சிறிய பெட்டிக்குள் ஐந்து பற்கள்6. ஒரு ஜோடி சில்வர் ரிம்முடன் கூடிய வட்டவடிவகண்கண்ணாடிகள்7. Gulliver’s Travels, புத்தகம்8. P.G. Wodehouse’s The Inimitable Jeeves, புத்தகம்9. மிக அரிதாகக் கிடைக்கின்ற International Military Tribunal for the Far East, 10. The History of the Freedom Movement in India, 11. The Last Days of the Raj, 12. Moscow’s Shadow Over West Bengal 13. Solzhenitsyn’s The Gulag Archipelago.

7 முதல் 13 வரையிலான புத்தகங்கள் மற்றும் ஜர்னல்கள் ஒரு முகம் தெரியாத சாதுவிடம் இருக்கக்கூடியதல்ல. மிக ஆழ்ந்து வாசிக்கின்ற ஒரு தேசபக்தரிடம் இருக்கவேண்டியவை. நேதாஜி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதையும் இங்கே நினைவு கூரவேண்டும்.

மேலும் தொடர்வோமா..?

ஃபைஸாபாத்தில் அந்த சாதுவின் உடைமைகளைப் பரிசோதனை செய்ய எம் கே முகர்ஜி 2001 இல் சென்றார். கமிட்டி அமைக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்து அதற்கும் ஐந்தாண்டுகள் முன்பே வெளீயான சாதுவின் உடைமைகளைப் பரிசோதிக்க காலதாமதம் ஏன் என்பது உங்களைப் போலவே எனக்கும் தோன்றுகிறதுதான். ஆனால் ஓர் அரசாங்கம் அமைக்கும் கமிஷன் அந்த அரசு சொன்னபடிதான் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் சிறுகுழந்தைகள் அல்ல தானே..?

முகர்ஜி சென்றபோது அவருடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் அனுஜ் தர் என்பவரும் சென்றிருந்தார். அவரது கூற்றின்படி அங்கே பெட்டிகளில் இருந்த சில புத்தகத்தில் மார்ஜின் பகுதியில் எழுதப்பட்டிருந்த சில வரிகள் ( குறிப்பெடுத்தவை போன்றவை ) நிச்சயமாக சுபாஷ் சந்திர போஸினுடையதுதான் என்பதை அந்த நிருபர் உறுதி செய்துகொண்டதாகக் கூறுகிறார். கையெழுத்து நிபுணர் ஒருவரிடம் கொடுத்து பரிசோதிக்கப்பட்டபோது அந்த நிபுணர் அது நிச்சயமாக நேதாஜியினுடையதுதான் என்று கூறியும் முன்னரே முடிவு செய்திருந்தபடி முகர்ஜி கமிஷனும் அதைத் தொடர்ந்து அரசாங்கமும் அந்த நிபுனரின் கூற்றை அதிரடியாக மறுத்துவிட்டது.2006 ஆம் ஆண்டில் முகர்ஜி கமிஷன் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை நேதாஜியின் மறைவைப்பற்றிய மர்மங்களை அதிகரிக்கவைத்தது என்பதுதான் அந்த அறிக்கையின் முக்கிய அம்சம்.

ஆம்.

அந்த முகர்ஜி அறிக்கையின்படி

# நேதாஜி முன்பு ஜப்பான் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி இறந்தது தவறான செய்தி.# டோக்கியோவில் இருக்கும் ஜப்பானிய கோயிலில் இருந்து கிடைத்த சாம்பல் நேதாஜியினுடையது அல்ல.

# ஃபைஸாபாதில் இறந்த சாதுதான் நேதாஜியா என்பதில் முழுமையான முடிவுக்கு வரும்படியான சாத்தியக்கூறுகள் கிடையாது.

( அதே நேரம் 2010 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் அதே முகர்ஜி ஃபைஸாபாதில் இறந்த சாதுவும் நேதாஜியும் ஒருவர் தான் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார் என்பது ஆச்சரியமான அதே சமயம் சிந்திக்கத்தக்க ஓர் அம்சம் )

முடிவாக எம் கே முகர்ஜியின் அந்த கமிட்டி அறிக்கையை நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அப்போதைய ( 2006 ) சோனியா அரசு மறுத்துவிட்டது. ஆக 7 வருட பலகோடிச் செலவில் உருவான அந்த அறிக்கையும் கோயிந்தா..

அப்படி ஏன் தான் நேதாஜி விடயத்தில் மர்மத்தை வெளிப்படுத்த இந்திய அரசு அதாவது அப்போதைய காங்கிர அரசுகள் தயக்கம் காட்டியது என்று கேள்வி எழுகிறதல்லவா..?

இதற்கு விடை நேருவின் காலத்தில் இருந்தே வெட்ட வெளிச்சம்தான். நேருவுக்கும் நேதாஜிக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. இருவரும் காங்கிரஸுக்குள் டாம் அண்ட் ஜெர்ரியாகத்தான் இருந்தனர். பலமுறை காந்தியின் உதவியால் நேரு நேதாஜியை அவமதித்திருக்கிறார். பலர் முன் சாடியிருக்கிறார். நெருக்கடிமேல் நெருக்கடி கொடுத்து நேதாஜியை காங்கிரஸை விட்டே வெளியேறும் வகையில் நிர்ப்பந்தித்திருக்கிறார். ஆரம்பம் முதலே நேதாஜியை தீர்த்துக் கட்டும் சகலவித ஏற்பாடுகளையும் செய்தே வந்திருக்கிறார்.இதற்கெல்லாம் பல ஆதாரங்கள்/ சம்பவங்கள் இருந்திருக்கின்றன.

அதை மூன்றாம் பகுதியில் பார்ப்போமே..

நேதாஜியும் நேருவின் துரோகமும்...3..
______________________________________

நேதாஜியின் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட இறுதியான புகைப்படம் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம்தேதி சைகோன் விமானநிலையத்தில் என்று வரலாறு தெரிவிக்கிறது. அடுத்த ஐந்து நாட்களில் அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜப்பானிய செய்தி நிறுவனம் அவரை இறந்ததாக அறிவித்தது,

அந்த அறிவிப்பு இதுதான் :

He was seriously injured when his plane crashed at Taihoku airfield [Taipei, then in Formosa, now in Taiwan] at 14.00 hours on August 18th. He was given treatment in a hospital in Japan [sic] where he died at midnight.

அடுத்து செப்டம்பர் 7 ஆம்தேதி நேதாஜியுடன் இறுதியாக விமானத்தில் பயணித்த கர்னல் ஹபிபுர் ரஹமான் கூற்றுப்படி இருவரும் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில் நேதாஜி இறந்துவிட்டதாகவும் ஹபிபுர் ரஹ்மான் மட்டுமே உயிர்பிழைத்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன. பிறகு அஸ்தி நிரம்பிய கலயம் ஒன்றை எடுத்துக்கொண்டு டோக்கியோ வந்து சேர்ந்தார் கர்னல் ஹபிபுர் ரஹ்மான், அந்த கலயம் டோக்கியோவில் இருக்கும் ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டு ‘’ நேதாஜி சலே கயே ’’ ( நேதாஜி மறைந்துவிட்டார் ) என்று அறிவிக்கப்படுகிறது.

இப்போது பல கேள்விகள் நம் முன்னால் உள்ளன.

# அத்தகைய விமான விபத்தில் நேதாஜி மட்டும் உயிரிழக்க ஹபுபுர் ரஹ்மான் பிழைத்துக் கொண்டது எப்படி..?

# இறந்தது நேதாஜி என்னும் போது அவசரம் அவசரமாக எரிக்கப்பட்டது ஏன்..? பூத உடலை புகைப்படம் எடுக்காதது ஏன்..?

# ஒரு கலயத்தில் காணப்படும் அஸ்தி நேதாஜியுடையதுதானா என்பதற்கான ஆதாரம் வேறு என்ன இருக்கிறது…?

அது இருக்கட்டும். பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அந்த அறிவிப்புக்குப்பின் இந்திய பத்திரிகையாளர் ஹரின் ஷா என்பவர் தைப்பே. (Taipei ) சென்று அங்கே நேதாஜியின் மருத்துவ மற்றும் தகனத்துக்கான போலீஸ் ரிப்போர்ட்களைப் பார்வையிட்டார். ஜப்பான் மொழியில் இருந்த அந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதிர்ச்சி கிடைத்தது. தைப்பே மருத்துவமனையில் இதய அதிர்ச்சியில் இறந்த ஒகாரோ இசிரோ (Okara Ichiro ) என்பவரது தகனம் என்பதும் அவர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தகனம் செய்யப்பட்டார் என்பதும் தான் அந்த அதிர்ச்சிகரத் தகவல்.

இந்தச்செய்தி முகர்ஜியின் கமிஷன் செய்த விசாரணையில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையையே குப்பை என ஒதுக்கியது சோனியாவின் அரசு. ஏன்.. ?

நேதாஜியின் மரண மர்மத்தை வெளியுலகுக்கும் நேதாஜியின் வழித்தோன்றலுக்கும் காட்டாமல் வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன..?

பாரதரத்னா முன்பொருமுறை நேதாஜிக்கு வழங்கப்பட்டபோது நேதாஜியின் வாரிசுகள் திட்டவட்டமாக மறுத்ததன் காரணமே இதுதான். எந்த தலைவரை இந்தியாவும் ஏன் உலகமுமே தலையில் வைத்துப் போற்றியதோ அந்தத் தலைவரின் மரண ரகசியத்தை அவரது குடும்பத்துக்குக் கூடத்தெரிவில்லாமல் காத்துவருகையில் அவருக்கான பாரதரத்னாவில் மதிப்பு இல்லை.நேதாஜிக்கு பாரத ரத்னா மதிப்பு தரப்போவதில்லை. பாரதரத்னாவுக்கு வேண்டுமானால் நேதாஜிக்கு கிடைப்பதால் உயர்வு கிடைக்கலாம்.

நேதாஜியின் மரண ரகசியத்தை நேருமுதல் அவரது வாரிசுகள் அனைவருமே கட்டிக்காத்து வருவதன் மிக முக்கியக்காரணங்கள் என்ன என்ன..?

# காங்கிரஸ் எழுதிய இந்தியச் சுதந்திர வரலாற்றில் காந்தியும் நேருவும் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதையும் பட்டேல் முதல் முத்துராமலிங்கத் தேவர் ( நேதாஜியின் மிக நெருங்கிய நண்பர் ) வரை மற்ற சுதந்திரப்போராட்ட வீர்ர்களை எல்லாமே இருளடித்து வைத்திருப்பதையும் இந்திய சுதந்திர வரலாறு படிப்பவர்கள் உணரலாம்.

# நேதாஜி பற்றிய பல விவரங்கள் தெரியவந்தால் சுதந்திரப்போராட்டத்திற்கான மிகமுக்கிய காரணகர்த்தாவான நேதாஜி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு காந்தி நேருபற்றிய ஏகத்தாங்கல்கள் அனைத்தும் பொய்யெனப் புலப்பட்டுவிடலாம். ( கொஞ்ச காலம் முன்பு வெளியான மாணவர்களுக்கான சர்வே ஒன்றில் இருபதாம் நூற்றாண்டி மிகச்சிறந்த தலைவர்கள் வரிசையில் காந்திக்கு முதலிடமும் நேதாஜிக்கு இரண்டாவது இடமும் மூன்றாவது இடமாகத்தான் நேருவுக்கும் கிடைத்ததை வைத்து இருட்டடிப்புச் செய்தபின்னர் கூட நேதாஜி இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம். )

# இப்படி இருக்க நேதாஜி பற்றிய அனைத்து விவரங்களும் வெளிப்பட்டால் காந்தியின் இடம் காலியாகிவிடும். சொகுசு வாழ்க்கையிலும் தின்பதிலும் பெண்கள் சுகத்திலும் மட்டுமே அதிகம் திளைத்திருந்த நேருவின் இடம் சுவடு தெரியாமல் போய்விடும். இந்த ஒரு காரணம் போதாதா நேரு குடும்பத்தின் கள்ளமவுனத்தைக் காட்டுவதற்கு..?

இன்னும் சில விடயங்கள் உள்ளன.

நேதாஜி இந்திய தேசியக்காங்கிரஸில் மகத்தான இடம் வகித்து வந்தபோதிலேயே நேருவுக்கும் நேதாஜிக்கும் ஒவ்வாமை இருந்தது. நேதாஜியின் கனத்த கம்பீரமான கேட்பவரை வசியவைக்கும் குரலும் அவரது பேச்சில் இருந்த காந்தத் தன்மையும் காங்கிரஸில் அவருக்கான மகத்தானதோர் இடத்தைப் பெற்றுத்தந்திருந்தது. அவரது வளர்ச்சி என்பது நேருவின் பம்மாத்துக்கு மிகவும் தீவிரமாக உலைவைக்கும் என்பதை நேரு நன்றாக உணர்ந்திருந்தார். அவரை எப்படி எல்லாம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றுவது என அவர் காந்தியுடன் சேர்ந்து வகுத்த திட்டங்களும் நேதாஜியின் தீவிரவாதப் போக்கும் அவருக்கென மிகப்பெரும்பான்மையோர் ஆதரவும் இருந்ததை எல்லாம் கண்ட காந்தி நேரு கூட்டணி அவரை காங்கிரஸிலிருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவைத்தது என்பது வரலாறு காட்டும் மிகப்பெரிய சோகம்.

அதன் பின்னர் தான் நேதாஜி ஃபார்வேர்ட் ப்ளாக் கட்சியைத் துவக்கினார். தீவிரமாக இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறவேண்டி யோசித்தார். அவரது நோக்கம் மிகத்தெளிவு. எந்த விலை கொடுத்தாவது பிரிட்டிஷாரை வெளியேற்றியே தீரவேண்டும் என்பதுதான்.

அந்த நோக்கத்திற்காகவே அப்போது பிரிட்டனுக்கு மிகக்கடுமையான எதிரியாக விளங்கிய ஜெர்மனியுடன் கூட்டிணைந்து பிரிட்டிஷாரை தோற்கடித்து இந்தியாவைச் சுதந்திரமடையவைக்கவேண்டுமென விழைந்தார்.

இதன் காரணமாக பிறகு என்ன எல்லாம் நிகழ்ந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போமா..?

நேதாஜியும் நேருவின் துரோகமும்...4.
_____________________________________

நேதாஜியின் மறைவுச்செய்தி இந்தியாவுக்கு வந்தடைந்தவுடன் அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வாவெல் சொன்னது : இதை நான் நம்ப மறுக்கிறேன். அவர் ( நேதாஜி ) தலைமறைவாய்ப் போகவேண்டுமென நினைத்தால் கொடுக்கப்படும் மிக அருமையான செய்தி இதுதான் ‘’

அதே சமயம் காந்தியும் 1946 ஆம் ஆண்டில் சொன்னார் : ’’எனது உள்ளுணர்வு எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது சுபாஷ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்பதுதான். அவர் எங்கோ மறைவாக இருக்கிறார். ’’
நேதாஜியை அறிந்தவர் யாருக்குமே தெளிவாகத் தெரிந்த உண்மை என்ன என்றால் நேதாஜி தப்பிக்கவேண்டும் என்று நினைத்தால் அது எத்தகைய சூழ்நிலையானதாக இருந்தாலும் அவர் தப்பித்தே தீருவார் என்பதுதான். இதற்கு பல முன்னுதாரணங்கள் இருந்துள்ளன.

1941 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் பிரிட்டிஷ் அரசு அவரை இல்லக் கைதியாக வைத்திருக்கையில் பிரிட்டிஷ் காவலர்களின் கண்களில் மண்ணைத்தூவி ஆஃப்கானிஷ்தான் சென்று அங்கே இருந்த இத்தாலியத் தூதுவரின் உதவியால் ஓர் இத்தாலிய வியாபாரியாக ‘’ ஆலண்டோ மஸோட்டா ‘’ என்னும் பெயரில் மத்திய ஆசியா வழியாக மாஸ்கோ சென்று பிறகு அங்கிருந்து பெர்லினுக்கு ஹிட்லரைச் சந்திக்கச் சென்றார்.

இதை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அத்தனை தூரம் மறைவாகச் சென்றடைவது என்பது இக்காலத்தில் கூட இயலாத விடயம். ஆயினும் அவரது தீரமும் தீர்க்கமான முடிவும் நாட்டுப்பற்றும் அவரை இந்த சாகசத்தைச் செய்து முடிக்கத்துணையாய் இருந்தன.

பெர்லினில் இருந்துகொண்டே பிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக வானொலியில் பிரச்சாரம் செய்து பிரிட்டிஷை இந்தியாவிலிருந்து துரத்த ஜெர்மனியின் துணையை நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இன்றைக்கு சொகுசாக வாழ்ந்துகொண்டு முகநூலில் பிரசங்கம் செய்பவர் யாரும் நேதாஜியின் அன்றைய முடிவை எகத்தாளமாகப் பேசலாம். ஆனால் எத்தைத்தின்றால் பிரிட்டிஷ் என்னும் பித்தம் ஒழியும் என்று இருந்த தேசபக்தரான நேதாஜி செய்தவை எதுவுமே தவறானவை அல்ல என்று அன்றைய காலக்கட்டத்தில் இருந்து யோசித்தால் புலப்படும்.

பிறகு ஹிட்லரின் சில கண்டிஷன்களால் வெறுப்படைந்து அங்கிருந்து நழுவி கடல்வழியாக நீர்மூழ்கிக்கப்பலின் மூலமாகவே ஜப்பானுக்குச் சென்று அங்கே 50 ஆயிரம் படைவீரர்களைத் திரட்டி ஆசாத் ஹிண்ட் ஃபௌஜ் அல்லது இந்திய தேசிய ராணுவத்தை (Indian National Army (INA) ) அமைத்தார். அந்தப்படையில் பெரும்பாலும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிசெய்து ஜப்பானால் கைப்பற்றப்பட்ட இந்திய வீரர்களை ஒருங்கிணைத்தார். இதைச் சொல்லவருவதன் காரணம் அவர் நினைத்தால் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ரகசியமாகச் செல்லமுடியும் என்பதுதான். அத்தகு நுண்ணறிவும் சமயோசிதப்புத்தியும் கொண்ட ஒரு தேசியத்தலைவரைத் தான் நேருவும் காந்தியும் மிக எளிதாக ஓரம்கட்டினார்கள். காரணம்..?

ஆரம்பம் முதலாகவே அவரது தீட்சண்ணியத்தையும் தேசப்பற்றையும் அவரது மக்களை வசீகரிக்கும் தேஜஸும் காந்தியையும் நேருவையும் பொறாமைப்பட வைத்ததோடு நேதாஜி இருந்தால் அவர்களது நாடகம் செல்லாது என்பதையும் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்கள்.

நேதாஜி பிரிட்டிஷுக்கு எதிராகப் படைதிரட்டிப் போரிட முடிவு செய்த உடனேயே அவரை தேசத் துரோகி எனவும் நாட்டுக்கு எதிரானவர் என்றும் பயங்கரவாதி என்றும் பிரிட்டிஷார் முடிவு எடுத்து அறிவித்ததோடு காந்தியையும் நேருவையும் கூட இந்தச் செயலுக்கு ஒத்து ஊதவைத்தனர். காந்தி சொன்னவை எல்லாவற்றையும் பிரிட்டிஷார் செய்து முடித்தார் என்னும் மிகப்பெரிய வியப்பான உண்மையை நம்மில் எத்தனைபேர் அறிவோம்..? அதை விடுங்கள். அதை பிறிதொரு சமயம் கண்டிப்பாக எழுதுவேன்.

ஜப்பானில் விமான விபத்து என்னும் நாடகத்தை நடத்தி அவருடன் உற்ற நண்பராக இருந்த ஹபிப் புர் ரஹ்மானின் உதவியால் ரஷ்யா சென்று அங்கே தலைமறைவாய் வாழ்க்கை நடத்திப் பின்னர் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் இந்தியாவுக்கு வந்து யோகியாகவும் சாதுவாகவும் ஃபைஸாபாத்தில் வசித்து பிறகு இயற்கை எய்தினார் என்பது தான் இதுவரை வந்த நேதாஜி பற்றிய செய்திகளில் இருந்து பெரும்பாலோர் முடிவுக்கு வந்திருக்கும் விடயம்.

ஆனால் காங்கிரஸ் ஆரம்பம் முதலாகவே நேதாஜிக்கு வன்சகமும் துரோகமும் செய்து அவர் பற்றிய செய்திகள் எல்லாம் அறிந்தும் இந்த நாள் வரை மறைத்து வந்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.ஒரு மகத்தான தேசபக்தி மிகுந்த தேசத்தலைவரை இருட்டடிப்பு செய்தபின் காந்தியையும் நேருவையும் மட்டுமே சுதந்திரப்போராட்ட வீரர்களாகச் சித்தரித்து வரலாற்றைப் பூசி மெழுகி இன்னும் நாடகம் நடத்துகிறது காங்கிரஸ்.

தற்போது அறுதிப்பெரும்பான்மையுடன் அசைக்கமுடியாத அரசை நிறுவியிருக்கும் மோடிஜியின் அரசாவது புதைந்து போன
நேதாஜியின் ரகசியங்களை வெளிக்கொணர்ந்து உலகுக்கு உண்மையான தேசத்தலைவர் யார் என்பதை நிரூபித்துப் பின்னர் பாரத ரத்னா வழங்கினால் நான் மிகவும் மகிழ்வேன்.

இப்பதிவை இத்துடன் முடித்துக் கொண்டாலும் உங்களுக்கு எழும் ஐயங்களைத் தொடுத்தால் அவற்றுக்கு பதிலைத் தொகுத்து இன்னுமொரு பதிவையும் பதிவேன்.

பொறுமையாக நான்கு பகுதிகளையும் வாசித்து விருப்பமிட்டு பகிர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து தேசபக்தர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

ஜெய் ஹிந்த். ஜெய் பாரத்..ஜெய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..!

நன்றி : கலைவேந்தன்.

Friday, 12 September 2014

சி.வை.தாமோதரம்பிள்ளை

எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் உ.வே.சா எண்ணற்ற நூல்களை பதிப்பித்தார் என்றால் அதற்கு முந்தைய நூற்றாண்டில் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) என்று எண்ணற்ற நூல்களை பதிப்பித்தவர் இவரே.
யாழ்ப்பாணத்தின் சிறுப்பிட்டி ஊரில் பிறந்த இவர் இருபது வயதில் நீதிநெறி விளக்கம் நூலை பதிப்பித்தார். நெடுங்காலத்துக்கு முன்னரே தொலைந்து விட்டதாக கருதப்பட்ட தேடி தேடி அலைந்து,எண்ணற்ற சுவடிகளை கண்கள் இடுக்கி படித்து,செல்லரித்தவற்றை செப்பனிட்டு அவர் சொல்லதிகாரத்தை வெளியிட்டார். . அதை ஆறுமுக நாவலர் தொகுத்து பிழை திருத்திய பின்னேர் வெளிவந்தது. அதே போல எழுத்து மற்றும் சொல் அதிகாரங்களையும் பதிப்பித்தார்.



உ.வே.சா சீவகசிந்தாமணியை இரண்டு முறை பிழை சரிபார்த்து வைத்திருந்த பொழுதும் அதை பதிப்பிக்க யோசித்துக்கொண்டு இருந்தார். அவரை அந்நூலை பதிப்பிக்கும் படி ஊக்குவித்தது இவரே. அதனாலே அந்நூல் தமிழருக்கு கிடைத்தது. இதை தமிழ்தாத்தாவே அந்நூலின் முன்னுரையில் குறிக்கிறார்.

சென்னை பல்கலையின் முதல் பட்டதாரி என்கிற சிறப்புக்கும் உரியவர் இவரே. தமிழ் இலக்கணம் படிக்கிற பொழுதெல்லாம் இவரை நினைவில் நிறுத்துவோம்.

Thursday, 11 September 2014

216 சிவாலயங்கள்

216 சிவாலயங்கள்

நமச்சிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க!!

216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப இருப்பிடம் - போன் குறிப்புகள்  இங்கே..

 சென்னை மாவட்டம்

01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.



காஞ்சிபுரம் மாவட்டம்

05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.

திருவள்ளூர் மாவட்டம்

17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.

வேலூர் மாவட்டம்

23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.


திருவண்ணாமலை மாவட்டம்

26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.



கடலூர் மாவட்டம்

30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.

விழுப்புரம் மாவட்டம்

49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.

நாமக்கல் மாவட்டம்

61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.

ஈரோடு மாவட்டம்

62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.

திருப்பூர் மாவட்டம்

64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.


திருச்சி மாவட்டம்

66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455.
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.



அரியலூர் மாவட்டம்

79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.

கரூர் மாவட்டம்

81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.

புதுக்கோட்டை மாவட்டம்

85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212

தஞ்சாவூர் மாவட்டம்

86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043.
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.



திருவாரூர் மாவட்டம்

141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457.
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416.
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555.
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646.
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707.
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876



நாகப்பட்டினம் மாவட்டம்

197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.

திருச்சிற்றம்பலம்

சங்கராபரண அடமானம் !!

தங்கத்தை அடகு வைக்கக் கேட்டிருக்கிறோம் ! நிலத்தை அடமானம் வைக்கக் கேட்டிருக்கிறோம் !!

ஒரு ராகத்தை அடமானம் வைத்ததைக் கேள்விப்பட்டதுண்டா ?!

வைத்திருக்கிறார்கள் என்கிறார் தமிழ்த் தாத்தா !!

தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் தன் வரலாற்று நூலான " என் சரித்திரம் " ஜகப் பிரசித்தமானது !. ஆனால் , அவர்களின் உரைநடை நூல்கள் , அவரது " என் சரித்திரம் " போல எல்லோராலும் அறியப்படாது இருப்பது வருத்தத்திற்கு உரிய விஷயம் ...மறுபதிப்பு அவசியம் காணவேண்டிய நூல் !!..பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவரது காலத்திலும் , அவருக்கு முன்பும் நடைபெற்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்த உரைநடை நூல்களில் காணலாம் .

அதில் ஒன்று தான் இந்த ராகத்தை அடமானம் வைத்த நிகழ்ச்சியும் !

நரசையர் ( நரசிம்ஹ ஐயர் ) என்கின்ற இசைக் கலைஞர் தஞ்சாவூர் அரசவையில் கச்சேரி செய்யும் போது , அவர் பாடிய சங்கராபரணம் ராகத்தின் அழகில் மயங்கிய அரசர் அவருக்கு , " சங்கராபரணம் " நரசையர் என்று பட்டம் அளித்தாராம் !

ஒருமுறை , அவருக்கு அவசரத் தேவை ஏற்பட்டு விட்டது .

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் இசைக் கலைஞர்களைப் பெருமளவில் ஆதரித்து ஊக்குவித்த பெரும் செல்வந்தரான கபிஸ்தலம் இராமபத்திர மூப்பனார் அவர்களைச் சென்று பார்த்தார். வழக்கமான உபசரிப்புகள் முடிந்தது .

" ஐயா , எனக்கு ஒரு அவசரத் தேவை ..கொஞ்சம் கடன் வேண்டி இருக்கிறது "

" கடனா ? எவ்வளவு தேவையாய் இருக்கிறது ?"

" எண்பது பொன் "

" சரி , கடனாகக் கேட்கிறீர்களே ! எதையாவது அடமானமாக வைப்பீர்களா ?"

" என்னிடத்தில் இருக்கும் ஒரு ஆபரணத்தை வைக்கிறேன் "

" அப்படியா ? சரி ..காட்டுங்கள் ! பார்க்கலாம் !"

" ஐயா , அதைப் பார்க்க முடியாது ...காதால் கேட்டு மகிழலாம் ! "

" என்ன அது ?"

" என் சங்கீதத்திற்கு ஆபரணமான " சங்கராபரணம் " தான் ! ...உங்கள் கடன் அடைக்கும் வரை நான் எந்த மேடையிலும் அதைப் பாடமாட்டேன் !!! "

காலம் ஓடியது ...நரசையர் கடன் அடைபடவும் இல்லை ..அவரும் " சங்கராபரணத்தை " எங்கும் பாடவும் இல்லை !

ஒருமுறை , கும்பகோணத்தில் இருந்த அப்புராயர் என்ற கனவான் வீட்டுத் திருமணம் ..அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் செல்வாக்கோடு இருந்தவர் அவர் ! வாலீஸ் துரைக்கு வேண்டியவர் என்பதால் , "வாலீஸ் அப்புராயர் " என்றே அழைக்கப் பட்டவர்!

விழாவில் நரசையர் பாட்டு! அவருக்கே உரித்தான "சங்கராபரணம் " பாடச் சொன்னார் அப்புராயர் !

நரசையர் மறுத்துவிட்டார் !!

அப்புராயர் ஏன் என்று கேட்க , ராகத்தை அடமானம் வைத்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது !

ராயர் உடனே கடன் தொகையை வட்டியோடு மூப்பனாருக்குக் கொடுத்தனுப்பி கடன் விடுதலையைக் கையோடு வாங்கி வர ஆளனுப்பி விட்டார் .

ஆனால் , நடந்தது என்ன தெரியுமா ?

மூப்பனார் தாமே குடந்தைக்கு வந்துவிட்டார் !

ராயர் கொடுத்த தொகையையும் , விடுதலை முறியையும் திரும்பக் கொடுத்ததோடு மட்டுமல்லாது இன்னும் கொஞ்சம் தொகையும் கூடுதலாகக் கொடுத்து விட்டு சொன்னாராம் ....

" நரசையர் எவ்வளவு வேண்டுமானாலும் என்னிடம் கேட்டுப் பெற உரிமை உள்ளவர் . அவரைப் போன்ற கலைஞர்களை ஆதரிப்பதற்குத்தானே என்னிடம் செல்வம் இருக்கிறது ..அப்படி இருக்கையில் அவர் கடனாகக் கேட்டது எனக்கு சிறிது மன வருத்தம் அளித்துவிட்டது...எனவே , விளையாட்டாக அடகு இருக்கிறதா என்று கேட்டேன் ..அவரும் " சங்கராபரணத்தை " அடகு வைப்பத்தாகச் சொன்னார் ..இதுகாறும் அவர் எங்குமே அவர் அதைப் பாடவில்லை ...எவ்வளவு உயர்ந்தவர் !! அவருடைய வாக்கு எப்பேற்பட்டது ! "

கடன் அடைபடாத வரை சங்கராபரணம் பாடாத நரசையரின் வாக்குச் சுத்தத்துடன் ,வாங்கிய கடனைத் திரும்பக் கொடுத்தாலும் அதை வேண்டாமென்று சொல்லித் தாமே கூடுதலாயும் தொகை அளித்த இராமபத்திர மூப்பனாரின் வள்ளன்மையும் குடந்தையில் அன்று விளங்கியது !

மறுநாள் ராயர் வீட்டுக் கல்யாணத்தில் " சங்கராபரணம் " ஜொலித்தது என்று சொல்லவும் வேண்டுமோ ! 

Monday, 25 August 2014

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) ;
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

மண்பாண்டத்தின் மகிமை!

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.


மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!

Saturday, 23 August 2014

அந்த காலம்

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,

கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,

எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,

வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

மழை நின்று நிதானமாக பொழியும்
,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,

தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,

பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்கவில்லை.,

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன... புத்தகத்தில்.,

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும் நம்பிக்கைகளும்தான்..,

மொத்தத்தில் மரியாதை இருந்தது

Monday, 4 August 2014

குமிழித்தூம்பு

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !

தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.



மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.முனைவர்-குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ஜீலை 2014 ரொத்திரம் இதலில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது..

Thursday, 31 July 2014

தமிழும் சித்தர்களும்

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது. இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

“எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்” என்று திருத்தக்க தேவரின் “சீவக சிந்தாமணி” சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறதுகம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி!

இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்தபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

கொரிய இளவரசி தமிழச்சி :

கி.மு 48ஆம் காலகட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயதான பேரழகி தன் கனவில் கண்ட இளவரசனை காதலித்து அவரை திருமணம் செய்துகொள்ள எண்ணினாள். அவளின் ஆசை படி அந்த பெண்ணை அவள் பெற்றோர்கள் மரக்கலத்தில் ஏற்றி கொரியா அனுப்பிவைக்க அவள் கொரியாவையும் அந்நாட்டு மன்னரையும் அடைந்தாள்.

இளவரசியின் சொந்த ஊர் ‘ஆயுத்த’ அல்லது ‘ஆயித்த’ என்றும் சொல்கிறார்கள். அந்த பெயர் அயோத்தி என்ற பெயரை ஒத்து இருப்பதால் ஆயித்தி தான் அவரின் பூர்வீகம் என்றும் கருதப்படுகிறது. அந்த இளவரசியில் பெயர் ஹியோ ஹவாங் ஒக்கே. ஹியோ ஹவாங் ஒக்கே இளவரசி ஒரு தமிழ் பெண் என்றவுடம் அதை நம்ப மனம் மறுத்தது. பின்பு மெல்ல மெல்ல நம்பத்தொடங்கினேன் அவர்களில் கலாச்சாரத்தையும் அவர்கள் மொழியையும் பார்த்து.

தமிழகளை போல கொரிய நாட்டினரும் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தான் அழைக்கிறார்களாம். ‘புதியது’ என்பதை ‘புது’ என்கிறார்களாம். ‘நீ திரும்ப வா’ என்பதை ‘நீ இங்கே பா’ என்கிறார்களாம்.
‘உயரம்’ என்பதை ‘உரம்’ என்கிறார்கள். நாம் சொல்லும் அச்சச்சோ! அப்பாடா.. வெல்லாம் அங்கே சகஜமாம். அவர்களது உணவு முறையும் தமிழர்களை போல் அரிசி சாதம் தான். ஊறுகாய் இல்லாது உணவே கிடையாது. இன்று தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாம். தமிழர்கள் அமைக்கும் குடிசைகள் போல தான் கொரிய நாட்டினரும் குடிசைகள் அமைப்பார்கலாம்.
தமிழ் இளவரசியின் சமாதி அங்கு இன்னமும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா தளமாக உள்ளது. அதே சமயம் நம் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் சமாதிகள் எங்கு போனதென்றே நமக்கு தெரியாது. தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படு, பல சாதனைகள் செய்த தமிழர்களை மறந்துவிடாதே!

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது.

மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார்.

அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?


தமிழும் சித்தர்களும்!!!

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது

இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.

தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது.

எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர்.

முதலாமவர் O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். 

சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.

Elaryan 4404-3836 BC – தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் – ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் – அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது

Eylouka 3836 – 3932 BC (QUEEN) – தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.

Kam 2713 – 2635 BC – தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.

Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் – அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி – சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.

Manturay 2180- 2145 BC – தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர – மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

Azagan 2085 – 2055 BC – தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.

Ramen Phate 2020-2000 BC – தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.

Ramesses I 1295-1294 BC – தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் – சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.

Wan Una 2000 BC – தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் – சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC – தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் – தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர்.இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு.

எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC – தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.

Piori 2000 – 1985 BC – தமிழில் பய் ஓரி > வ