எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் உ.வே.சா எண்ணற்ற நூல்களை பதிப்பித்தார் என்றால் அதற்கு முந்தைய நூற்றாண்டில் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) என்று எண்ணற்ற நூல்களை பதிப்பித்தவர் இவரே.
யாழ்ப்பாணத்தின் சிறுப்பிட்டி ஊரில் பிறந்த இவர் இருபது வயதில் நீதிநெறி விளக்கம் நூலை பதிப்பித்தார். நெடுங்காலத்துக்கு முன்னரே தொலைந்து விட்டதாக கருதப்பட்ட தேடி தேடி அலைந்து,எண்ணற்ற சுவடிகளை கண்கள் இடுக்கி படித்து,செல்லரித்தவற்றை செப்பனிட்டு அவர் சொல்லதிகாரத்தை வெளியிட்டார். . அதை ஆறுமுக நாவலர் தொகுத்து பிழை திருத்திய பின்னேர் வெளிவந்தது. அதே போல எழுத்து மற்றும் சொல் அதிகாரங்களையும் பதிப்பித்தார்.
உ.வே.சா சீவகசிந்தாமணியை இரண்டு முறை பிழை சரிபார்த்து வைத்திருந்த பொழுதும் அதை பதிப்பிக்க யோசித்துக்கொண்டு இருந்தார். அவரை அந்நூலை பதிப்பிக்கும் படி ஊக்குவித்தது இவரே. அதனாலே அந்நூல் தமிழருக்கு கிடைத்தது. இதை தமிழ்தாத்தாவே அந்நூலின் முன்னுரையில் குறிக்கிறார்.
சென்னை பல்கலையின் முதல் பட்டதாரி என்கிற சிறப்புக்கும் உரியவர் இவரே. தமிழ் இலக்கணம் படிக்கிற பொழுதெல்லாம் இவரை நினைவில் நிறுத்துவோம்.
No comments:
Post a Comment