Friday, 10 May 2013

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்


சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?
"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

100 ஆண்டு வாழ்வது எப்படி?
நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள் காண முடியும். ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில் கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)

பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.

தொடரும்....

Wednesday, 1 May 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்..!


அரிக்கன் விளக்கு

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை

ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

அடிகுழாய்

கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

ஆட்டுக்கல்

வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான்

தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஓட்டியாணம்

பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம்

(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல்

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உரி

(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம்

(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கூஜா

(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

கோகர்ணம்

(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு

வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி

(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி

பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி

(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம்

கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி

(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை

(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு

மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம்

(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

லோட்டா

நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

மரப்பாச்சி

பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

நன்றி: தினமணி

Tuesday, 23 April 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!


ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறைசாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ?  கோயில் எப்படி கட்டப்பட்டது ????

பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.

10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.

இத்தகைய பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

சுமார் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.

பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!

*முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன பிற்காலங்களில் கட்டப்பட்டன.

*தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது

*1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாளை (சதயவிழா) அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

*1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது



* தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 1954ம் ஆண்டு பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்ட 1000 ரூபாய் தாள், 1995ம் ஆண்டு ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை, 2010ம் ஆண்டு ராஜராஜ சோழன் உருவம் பதித்த 5 ரூபாய் நாணயம் ஆகியன இந்திய அரசால் வெளியிடப்பட்டன.

Monday, 8 April 2013

சங்கப் புலவர் அகரவரிசை



தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது. எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை. அதனால் நான் இப்பெயர்களை அகர வரிசையில் அளித்துள்ளேன்.
பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால... மக்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.
இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது. இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது. பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.

சங்கப் புலவர் அகரவரிசை


1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் 
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற 
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார் 
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்