Friday 3 February 2017

சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரரை வழிபடும்போது, கைகளைத் தட்டி வழிபடலாமா?

சிவன் கோயிலுக்குச் செல்கின்றவர்கள் அனைவரும், தவறாமல் சண்டிகேஸ்வரர் சந்நிதிக்குச் சென்று, கைகளைத் தட்டி வழிபட்டுச் செல்வார்கள். அப்படி சண்டிகேஸ்வரரை வழிபடும்போது கைகளைத் தட்டி வழிபடலாமா? 

முற்காலத்தில் சோழ வள நாட்டில்,  சேய்ஞ்ஞலூர் எனும் ஊரில் எச்சதத்தன், பவித்திரை  என்னும் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு விசாரசருமன் என்ற மகன் இருந்தான். அவன் தினந்தோறும் கிராமத்திலுள்ள சிலருடைய பசுக்களை அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் மேய்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். பசுக்களை மேய்க்கும் தொழிலில் இருந்தாலும், விசாரசருமன் சிறு வயது முதற்கொண்டே சிவபக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவனாக இருந்தான். இதனால் சகல உயிரினங்கள் மீதும் குறிப்பாக பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் இவனிடம் மிகவும் பிரியமாகப் பழகின. 

பசுக்களை மேய்க்கும்போது ஒவ்வொரு நாளும்  அங்குள்ள ஒரு மர நிழலில் மணலைக் குவித்து  சிவலிங்கம்  போல் செய்து சிவனை வழிபட்டு வந்தான். அப்படி அவன் உருவாக்கிய சிவலிங்கத்தின் மீது இவனுடன் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கள், பாலைப் பொழிந்து அபிஷேகம் செய்வது வழக்கம். சிவலிங்கத்துக்கு  பசுக்கள்  பாலைப் பொழிந்திருந்தாலும் மாலையில் வீடு திரும்பியதும், தங்களது எஜமானர்களுக்கு வழக்கத்துக்கு அதிகமாகவே பாலைப் பொழிந்தன .  

ஒருநாள், அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்,  விசாரசருமனின் மணல் லிங்கத்தின் மீது பசுக்கள் தானாகவே சென்று  பாலைப் பொழிவதைப் பார்த்துவிட்டான். வியப்பான இந்த நாடகம் அவனுக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. தினமும் இப்படி நடப்பதை ஊருக்குள் போய், மாடுகளின் எஜமானர்களிடம்  சொல்லிவிட்டான். உடனே அவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு வந்து விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தனர். இத்தனை நாளாக தான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயருக்கு தனது மகனால் கலங்கம் ஏற்பட்டுவிட்டதென  ஆத்திரமுற்றார். மறுநாள் மகன் பசுக்களை மேய்க்கச் சென்றதும், மறைந்து மகனின் செயலையும் பசுக்களின் போக்கையும் கவனித்தார். பசுக்கள் தானாகவே வந்து மணல் லிங்கத்தில் பாலைபொழிவதைப் பார்த்து, ஆத்திரமுற்றவர் மகனை அடித்து உதைத்தார். 

''இங்கே எவ்வளவு பாலை பொழிந்தாலும், வீட்டுத் தொழுவத்தில் கறக்கும்போதும் வழக்கமான அளவைவிட கூடுதலாகவே தருகின்றபட்சத்தில், எதற்காக நீங்கள் கோபப்படுகிறீர்கள்?'' என்றான். தன் மகன் தன்னையே எதிர்த்துப்பேசியதால், மணல் லிங்கத்தை காலால் உதைத்து கலைத்தார். தன் நெஞ்சகோயிலில் தெய்வமாக வைத்து வணங்கும் ஈசனை எட்டி உதைத்த தந்தையின் மீது சினமுற்ற விசாரசருமன், அருகிலிருந்த குச்சியை எடுத்து வீசினான். அது சிவபெருமானின் மழுவாக மாறி,  அவரது காலை வெட்டி காயப்படுத்தியது. 

தன் மீது இருக்கும் அன்பினால், தகப்பன் என்றும் பாராமல் காயப்படுத்திய விசாரசருமனின் பக்தியில் நெகிழ்ந்து போன சிவபெருமான், பார்வதி பிராட்டியாருடன் தோன்றி, எச்சதத்தனின் காலை குணப்படுத்தியதுடன், விசாரசருமனுக்கு தனது சிவ கணங்களை நிர்வகிக்கும் 'சண்டேச' பதவியையும் வழங்கினார். தனக்கு அணிவிக்கும் மாலை, நைவேத்தியங்களை சண்டிகேஸ்வரருக்கும் வழங்க வேண்டுமெனவும் கூறினார். 

இத்தனை சிறப்பு வாய்ந்த சண்டீகேஸ்வரர் எப்போதும் சிவ சிந்தனையுடன் தியானத்தில் இருப்பவர். அதனால், அவரை வணங்கும்போது, கைதட்டி வணங்குவது, கைகளைச் சொடுக்கி சொடக்கு போடுவது, தங்களது உடையிலிருந்து ஒரு நூலைப் பிரித்தெடுத்து போட்டுவிட்டு வருவது போன்றவற்றை,  நாம் செய்யக்கூடாது. ஆகம விதிகளில் இப்படி கிடையாது. பிற்காலத்தில் ஆள் ஆளுக்கு ஏற்படுத்திக் கொண்ட சம்பிரதாயம் இது. இது கண்டிப்பாக தவிர்க்கப் படவேண்டும்.

சிவலாயங்களுக்கு வழிபடச் செல்லும்போது மூலவரை வணங்கியதும், விநாயகரை வணங்கும்போது தலையில் குட்டிக்  கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். முருகனை வழிபடும்போது, பிரணவ மந்திரத்தைச் சொல்லவேண்டும். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது, "ஆலய தரிசனத்தை சிறப்புறச் செய்து முடித்துவிட்டேன்" என மனதுக்குள் நினைத்து வணங்கினாலே போதும். 

நன்றி - விகடன்

Tuesday 29 March 2016

கி.மு

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.

முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது.

தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர்.

முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது.

உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன்.

இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான்.

3700 புலவர்கள் இருந்தனர்.

அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன.

பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.

சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர்.

துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது.

தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது.

சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம்.

கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம்.

கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

இரும்பின் உபயோகம்.

கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின.

வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன.

பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு.

வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன.

(சமசுகிருதம் வடமொழி அல்ல.
காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.)

தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின.

திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.

பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு.

(தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்.

பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன.

(தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது.

புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம்.

ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம்.

மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம்.

சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன்.

இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம்.

பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம்.

கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின.

பிராகிருதம் - மக்களின் மொழி.

நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம்.

தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது.

கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது.

இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி.

உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார்.

18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி.

பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள்.

இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 1 - கி.பி . 1

இயேசு பிறந்தார்.

Tuesday 22 March 2016

நோய்கள் தோன்ற காரணம்

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர்

விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது. இதில் நோய்கள் தோன்றுவதே கர்மவினையால் தான் என்ற கருத்தை பொதுவாக இன்றைய ஹோமியோபதி மருத்துவம் தவிர எந்த ஒரு மருத்துவ முறைகளிலும் ஏற்றுக் கொள்வதில்லை. அதே சமயம் சித்தமருத்துவ முறையிலும் இதனை ஆதாரங்களுடன் விளக்குகின்றது.

சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில் "அகத்தியர் கன்ம காண்டம் 300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் ஈளை  நோய் (இளைப்பு, ஆஸ்த்மா) வரும்.

பசுமையாய் வளர்ந்த இளம் செடி, கொடிகளை வெட்டுவதும், சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் வாதநோய் பக்கவாதம் வரும்.

பிறர் குடியை கெடுத்தல், நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் குன்மநோய் (அல்சர், குடற் புண்). இதில் எட்டு வகை நோய்கள் வரும். இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது.

மலராத அரும்பு பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் இதனால் குஷ்ட நோய் வரும்.

ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள், பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் வலிப்பு நோய் ஆகும்.

பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல், பட்டை வெட்டுதல், வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் பீனிசம் (சைனஸ்) ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான் போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல், இதனால் குழந்தையின்மை ஏற்படும்.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம், ஆணவம் போன்றவற்றால் பாண்டு இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய்கள் வரும்.

உயிர்களை வதைத்தல், ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் கிராணி, கழிச்சல், சீத பேதி நோய்கள் வரும்.

பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல், கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் கண், கன்னம், வாய் பல் போன்றவற்றில் பல வகை நோய்கள் வரும்.

சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் வண்டுகடி, ஊறல், கரப்பான்  நோய்கள் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் முதுகு தண்டில் பிளவை எனும் இராஜபிளவை வரும்.

பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல், கோழி, ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை, தெய்வ நிந்தனை போன்றவற்றால் 96 வகை கண்நோய்கள் தோன்றும். 

Monday 18 January 2016

கலியுகம் எப்படி இருக்கும்?

உத்தவ கீதையில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு கலியுகம் எப்படி இருக்கும் என்று மிக அழகாக தெரிவிக்கிறார்.

ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், "சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்" என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,

இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்."அர்ஜுனா,

கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆச்சாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்." – குயிலை போல்.

"பீமா,

கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்." – வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

"சகாதேவா,

கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்." - பசுவைப் போல்.

"நகுலா,

கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்." - பாறையைத் தடுத்த சிறுசெடியைப் போல்.

Tuesday 5 January 2016

ஆமைகளின் கடல்வழித்தடம்

" ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள் "

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப்பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன.

இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக்
கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர்
கிழக்கில் இருந்து வந்த வேளாண்தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன்
அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந்தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான்.

Wednesday 30 September 2015

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!

W.W skeat என்பவர், "The Etymological dictionary of the English language" இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 சொற்கள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% சொற்கள்) என்கிறார் ஆய்வின்படி.

எடுத்துகாட்டுகள் :

Cry - "கரை" என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - "களி" (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - "பிளிறு" என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - "கலைச்சாரம்" என்பதிலிருந்து வந்தது
இது மட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலசொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all religions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speech
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும்.

உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; Calculatrice.

கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100  வரும் )

" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .

2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( Europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )

- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் . 1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .

தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ; கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :

கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .

மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் .

Tuesday 8 September 2015

மகாபாரதப் போர் - பிரம்மாண்ட வியுகம்

இந்துக்களின் பிரம்மாண்டம் வியுகம் அமைப்பதில். 40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இதை பிரமாண்டமான திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் !

1.கிராஞ்ச வியுகம் (Heron formation)
2.மகர வியுகம் (Crocodile formation)
3.கூர்ம வியுகம் (Tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (Trident formation)
5.சக்ர வியுகம் (Wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (Lotus formation)
7.கருட வியுகம் (Eagle formation)
8.ஊர்மி வியுகம் (Ocean formation)
9.மண்டல வியுகம் (Galaxy formation)
10.வஜ்ர வியுகம் (Diamond or Thunderbolt formation)
11.சகட வியுகம் (Box or Cart formation)
12.அசுர வியுகம் (Demon formation)
13.தேவ வியுகம்(Divine formation)
14.சூச்சி வியுகம்(Needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (Horned formation)
16.சந்திரகல வியுகம் (Crescent or Curved Blade formation)
17.மலர் வியுகம் (Garland formation)
18.சர்ப வியுகம் (Snake formation)

மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது

படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.

3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள்

பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி


பாண்டவர் தரப்புப் படைகள்

விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி.

தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில் (7 அக்குரோணி)
15,30,900 படைகளும் கௌரவர் படையில்(11 அக்குரோணி) 24,05,700 படைகளும் இருந்தன.