Wednesday, 26 June 2013

எம்.கே.ராதா


அரிய புகைப்படம்.எம்.ஜி.ஆர். யாருடைய காலில் விழுந்து ஆசிபெறுகிறாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார்.

No comments:

Post a Comment