Thursday 19 February 2015

லீப் வருடம்

4 ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டுகளே லீப் வருடம் என்று நாமெல்லாம் படித்திருக்கிறோம். ஆனால், லீப் வருடம் என்பது இதற்கு மேலும் பல ஆழ்ந்த கணக்குகளை உள்ளடக்கியது.

ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலத்தை பொறுத்ததே. பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர சரியாக 365.2425 நாட்களாகின்றன. கணக்கிட எளிதாக இருக்கும் என்பதற்காக 365.25 நாட்கள் என எடுத்துக்கொண்டு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. எனவேதான் 4 ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டுகள் லீப் ஆண்டுகள் என பெயரிடப்பட்டு பிப்ரவரி மாதத்‌திற்கு 29 நாட்களாக கணக்கிடப்படுகிறது.

பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365.24 நாட்கள் என்பது துல்லியமான கணக்கு என்பதால் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் குறைக்கப்படுகிறது. எனவே 1700, 1800, 1900 போன்ற ஆண்டுகள் 4 ஆல் மீதியின்றி வகுபடும் என்றாலும் அந்த வருடங்கள் லீப் வருடங்கள் அல்ல.  எனவே இந்த ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களே.

கணக்கு மேலும் தொடர்கிறது; 365.2425 நாட்கள் என்பது மிக மிக துல்லிய கணக்கு என்பதால், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒருநாள் கூட்டப்படுகிறது. எனவே 1200, 1600, 2000 போன்ற ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்களே. இவை லீப்  வருடங்கள்.

லீப் வருடத்திற்கான கணக்கு

ஓர் ஆண்டின் 4 இலக்கங்களில் கடைசி 2 இலக்கங்கள் பூஜ்யமாக இல்லாவிடில் அந்த 2 இலக்கங்கள்  4 ஆல் மீதியின்றி வகுபட்டால் அது லீப் வருடம்; பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள். எடுத்துக்காட்டு : 1972, 1976, 1980, 1984 போன்ற வருடங்கள்.

ஓர் ஆண்டின் கடைசி 2 இலக்கங்கள் பூஜ்யமாக இருந்தால் 4ஆல் வகுக்கக்கூடாது. மொத்த எண்ணையும்  400ஆல் வகுக்க வேண்டும். 400 ஆல் மீதியின்றி வகுபட்டால் அது லீப் ஆண்டு. எடுத்துக்காட்டு : 800, 1600, 2000. மீதியின்றி வகுபடாவிட்டால் அது லீப் ஆண்டல்ல (பிப்ரவரிக்கு 28 நாட்களே). எடுத்துக்காட்டு : 1500, 1800, 1900, 2100 போன்ற ஆண்டுகள்

இதுதான் லீப் வருடக் கணக்கீட்டீன் முழுக்கதை.

No comments:

Post a Comment