தோழியின் சகோதரி திருமணத்தில்
பூக்கட்டும் இடத்தில் பூத்தவள்
ஒரு மழைக்கால ரயில் பயணத்தில்
ஈரமாய் என்னை ஈர்த்தவள்
மாரியம்மன் கோயில் அன்னதானப் பந்தலில்
விருந்தோடு விழியால் விழுங்கியவள்
ஓர் கோடை விடுமுறைக் காளானாய்
எதிர்வீட்டுத் திண்ணையில் முளைத்தவள்
இப்படியாக எத்தனையோ
விழியால் வரம் தந்து மறைந்த
தற்காலிக தேவதைகள்
அறிந்தோ அறியாமலோ
அணிந்திருந்தார்கள்
எனக்கான அதே கண்களை
- ஷான்
No comments:
Post a Comment