Thursday, 28 February 2013

அதே கண்கள்

தோழியின் சகோதரி திருமணத்தில் 

பூக்கட்டும் இடத்தில் பூத்தவள் 

ஒரு மழைக்கால ரயில் பயணத்தில் 

ஈரமாய் என்னை ஈர்த்தவள் 

மாரியம்மன் கோயில் அன்னதானப் பந்தலில்

விருந்தோடு விழியால் விழுங்கியவள் 

ஓர் கோடை விடுமுறைக் காளானாய் 

எதிர்வீட்டுத் திண்ணையில் முளைத்தவள் 

இப்படியாக எத்தனையோ 

விழியால் வரம் தந்து மறைந்த 

தற்காலிக தேவதைகள் 

அறிந்தோ அறியாமலோ 

அணிந்திருந்தார்கள் 

எனக்கான அதே கண்களை 

- ஷான் 

Wednesday, 27 February 2013

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்

Tuesday, 26 February 2013

20,000 வருடங்களுக்கு முந்தைய தமிழ்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

(((இதை படிக்க 2 நிமிடம் ஒதுக்குங்கள்)))

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 2 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !

நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !

தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

நன்றி !
தமிழ் ஓலை  TAMIL OLAI

Saturday, 23 February 2013

கவிஞர் சல்மா

இயற்பெயர் ராஜாத்தி(எ) ரொக்கையா. வயது 42. திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு சமூகத்தில் பிறந்த இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அவர் முதல் கவிதை அங்குதான் பிறந்தது.

நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணிப் பெண் படைப்பாளி. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்ட வாழ்க்கையும், அதனுள்ளிருந்து கசிந்துருகும் தனிமையும்தான் இவரது கவிதைகள்.

தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிவருகிறார். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (கவிதைகள் - 2000) இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் - 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஹிந்தி ,ஸ்பானிஷ் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கின்றது.

இந்த வருடத்தில் இரண்டு கவிதைத்தொகுப்புக்களும் ஒரு சிறு கவிதைத் தொகுப்பும் வெளிவர இருக்கின்றது. ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் இடம்பெற்றிருந்தது.ஆனால் தேர்வு பெறும் வாய்ப்பினைப்பெறவில்லை.

அரசியலிலும் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் அடைந்துள்ளார். உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு முதன்முதலாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதனால் இவர் அரசியலுக்கு வர முடிந்தது. 2001 முதல் 2006 வரை இவரது கிராமமான துவரங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். உள்ளாட்சி நிர்வாகத்தில் தனது கிராமத்தை சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின்பு தன்னை திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றார். 2006 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதிக்கு போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டார்.

தற்போது தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் தலைவியாக இருக்கும் பொழுது பெண் கருவைப்பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அது போக இந்திய துணை ஜனாதிபதியின் மனைவி சல்மா அன்சாரி தலைவியாக உள்ள துர்காபாய் தேஷ்முக் விருதுக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.

http://www.poetsalma.com

Friday, 22 February 2013

கிறிஸ்துவுக்கு முந்தய முருகன் கோவில்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.  இந்த செய்தி ஊடகங்களுக்கு முக்கியமல்ல.

எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நன்மை இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது.

பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது.

இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள்...

தண்டட்டி

பாம்படங்கள் தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். 

இருபது வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் நம் எல்லார் வீட்டிலும் பாட்டிமார்கள் ..காது தொங்கும் நகைகளை அணிந்த வண்ணம் இருப்பார்கள் ..

இதனை நாம் தண்டட்டி ,பாம்படம் என்று அழைக்கிறோம் 

சிறுவயதிலேயே ....காதுகுத்தி ...மரத்துண்டு பயன்படுத்தி .அல்லது குச்சம் காளி தொங்க விட்டு  .கொஞ்சம் கொஞ்சமாக காதை நீளமாக வடித்து .. தண்டட்டி ,பாம்படம் அணிந்து கொண்டனர் .
இதை அணிந்த பாட்டிமார்களை பார்க்கும்போது காது விழுந்து விடுமோ என்ற பயம் ஏற்படும் ..

பாம்படம் என்பது பந்து,கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும்.அரிதுளுவன் ..பன்னீர் செம்பு ..தாமரை கால் ,சுண்ணா கலயம்   என்ற பல வகைகள் உண்டு ..

தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு வகையான வடிவங்களை உள்ளடக்கிய இந்த பாம்படங்களும் ஒரு அறிவியல் படைப்பே ஆகும். 

இந்த நகைகள் உள்ளீடற்ற ..இலகுவான அமைப்பில் செய்யப்படும் ..மெழுகு வார்த்து ...உட்பொருளாக  சேர்கப்படும். 

அட்டியல் ,காசு மாலை ..போன்ற ஆபரணங்களையும் இப்போது காண முடியவில்லை .

இன்று வெகு சில பாட்டி மார்கள்  மட்டுமே பாம்படம் அணிந்து நம்மோடு இருகிறார்கள் ..

இன்னும்    சிலவருடங்கள் கழித்து நாம் புகைபடத்தில் மட்டுமே இதை காணமுடியும் .
பாம்படங்கள் தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும்.

இருபது வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் நம் எல்லார் வீட்டிலும் பாட்டிமார்கள் ..காது தொங்க...ும் நகைகளை அணிந்த வண்ணம் இருப்பார்கள் ..