Monday, 20 January 2014

ஆடியோ காஸெட்

நாம் எல்லாம் (எல்லோரும் இல்லை) அந்த காலத்துல (1988 க்கு முன்னாடி எனக்கு தெரியாது) எங்கேயும் எப்போதும் பாட்டு'னு கேட்டா அது காஸெட் மூலமா தான் இருக்கும்… ஒரு T-Series/Tdk (60'ல(12 பாட்டு) ( 90'ல (18 பாட்டு) empty cassette வாங்கிட்டு நேரா ஆடியோ ரெக்கார்டிங் கடைக்கு போய், ரெக்கார்டிங் கடையில் பல பெரிய போல்டர்களில் இருக்கும் பலவிதமான பாடல்கள் லிஸ்டில் இருந்து என்ன பாடல்கள் ரெக்கார்டிங்க் செய்யனும் என்று எழுதி அதை பார்த்து பார்த்து பாடல்களை தேர்வு செய்து ஆடியோ கடை அண்ணாச்சி கிட்ட கொடுத்தா அவரு நல்லா ரெக்கார்டிங் பண்ணி தருவாரு..
( A side'la 6/9 பாட்டு முடிஞ்சோன கடைசியில கொஞ்சம் இடம் இருந்தா அதுல அண்ணாச்சி கண்டிப்பா ஒரு ஆங்கில பாட்டு ரெக்கார்டிங்க போட்டு அவரு திறமைய காட்டிடுவாரு….)


இப்படி பார்த்து பார்த்து ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொரு காஸெட்யா "Tape recorder, walkman"ல போட்டு கேட்டா, அதுல இருக்கும் பாருங்க ஒரு சுகம்.. என்ன'னு சொல்லுறது….. . குறிப்பா இசைஞானி பாட்டுகள் (ஸ்டீரியோ) எல்லாம் ரொம்ப அசத்தலா இருக்கும்.
(அந்த effect இப்போ CD la கிடைக்க மாட்டேங்குது…).. 

நமக்கு பிடிச்ச பாட்டு, காஸெட்'ல ஒரு 4 பாடல் தள்ளி இருக்கும்.. .அதை ரீவைண்ட் பண்ணி அப்புறம் forward பண்ணி அதை கேட்கிறதுக்கு முன்னாடி பச்சை தண்ணிர்'ல ஜிலேபி சுட்றலாம்.. ஹி ஹி ஹி.. அதுக்கெல்லாம் எங்க இருக்கு டைம் + பொறுமை. (அப்போ வெட்டியா இருந்தோம், சோ எல்லாத்துக்கும் டைம் இருந்தது)

அப்போ நம்ம ஊருல ரெக்கார்டிங்'ல கலை கட்டுனது, ரிதம்ஸ், ரிதம்பாஸ் மியூசிகல்ஸ்..

ரிமோட் வாழ்க்கைக்கு மாரின பிறகு ரிமோட் இல்லாம எதுவுமே நாட் சுவிட்ச்சிங் ....

வெளியூர் எங்கையாச்சும் பஸ்'ல போட்கும் போது , உணவு நிறுத்தத்துல கண்டிப்பா அங்க ஒரு காஸெட் கடை இருக்கும்..அந்த கடையில 100% டூப்பிளிக்கேட் காஸெட் தான் விற்பாங்க… நம்மாளுங்க அந்த கடையில இருந்து 1960,1970'ல வந்த பாட்டுகள் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து, டீ கடையில போட்டுவிட்டுறுவாங்க…. நல்ல கேட்டீங்கனா, அந்த காஸெட் பாடுதா, இல்லை கதறுதானு தெரியாது.. ஹி ஹி ஹி.......அந்த அளவுக்கு ரெக்காட்டிங் மட்டமா இருக்கும்.. பாடல்கள் மட்டும் இல்லை, ஒரு சில தமிழ் படங்களின் ஆடியோவும் இதில் அடங்கும் 

அந்த காலத்து காதலர்கள் எல்லாம் தங்களுக்கு பிடிச்ச பாடல்கள் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி காதலிக்கு கொடுப்பாங்க பரிசா.... அதிலையும், டயலாக்கோடு வரும் பாடல்கள் இன்னும் பட்டையை கிளப்பும்.. பிரைவைட் டவுன் பஸ்'ல காலை, மாலை கல்லூரி நேரங்களில் நீங்கள் பயணத்திருந்தா அந்த அனுபவங்கள் உங்களுக்கு இருந்திருக்கும்... 
(இப்ப எல்லாம் யாரு இந்த காஸெட் கொடுக்குறா, இந்தா அன்பே உனக்கு பிடிச்ச பாடலகள் அடங்கிய சிடி'னு கொடுத்தா, இந்த சிடி'ய நேற்றே நான் பஜார்'ல 10 ரூவா கொடுத்து வாங்கிட்டேன்'னு பதிலுக்கு பதில் பல்ப் தான் வரும்…..)

இன்றைய நிலை.. 15ரூபாய்க்கு MP3 CD வாங்குனோமா, அதை pc'ல போட்டு நமக்கு வேண்டிய பாட்டை செலக்ட் செஞ்சோமா, (டவுன்லோடும் அடங்கும்) அதை அப்படியே Ipod, Mobile 'la ஏத்துனோமா, ear phone'a மாட்டுனோமா, பாட்டை கேட்டோமா'னு எல்லோரும் நிற்காம, கூட்டம் போடாம போய்கிட்டே இருக்கோம்.. 

எல்லாம் டெக்னாலஜி முன்னேற்றங்கள்

ஆயிரம் மாற்றங்கள் முன்னேற்றங்களாக மாறினாலும், கடந்து வந்த நினைவுகள் என்றுமே மாறாதவைகளே... ... 

Saturday, 16 November 2013

வரகின் மகிமை

வாத்தி வரகு திரித்த கதை

நமது சமயலறையில் பயன்படும் பல பொருட்களுக்கு பதார்த்த குண விளக்கங்கள் (Materia medica of plants,spices,minerals), அதாவது அதன் மருத்துவ மகிமைகள் பற்றி பேஸ்புக்கில் சில நண்பர்கள் சித்த வைத்தியர் ரேஞ்ச்சுக்கு பதிவிடும் போது, எனக்கு பொறாமையாக இருக்கும். நாமும் ஏதாவதொன்றின் மகிமையைப் பாடியே ஆகவேண்டும் என்று நினைப்பேன். எனக்கு பரிச்சயமானது வரகுதான்.அதைப் பற்றி எழுதிவிட்டேன். 

அரிசியே நமது பிரதான உணவென்றாகிவிட்டது. அப்படியிருந்தும் கூட, கம்பு சோளம் கேழ்வரகு மற்றும் ஓரளவு வழக்கொழிந்த வரகு,சாமை, திணை போன்ற தானிய வகைகள் போற்றப்படுவது மாதிரி அரிசி போற்றப்படுவதில்லை. அனீமியா தொடங்கி சர்க்கரை வியாதி வரை பல அவஸ்தைகளுக்கு அரிசியே காரணமென்று நிந்திப்பவர்களுமுண்டு. சர்வதேசச் சதிகாரர்களும் உள்ளூர் சதிகாரர்களும் ஒன்றிணைந்து நம்முடைய பாரம்பரியத் தானிய வகைகளை அழிதொழித்து, அதிகப் பராமரிப்பும், நீர்வளமும் தேவைப்படுகின்ற சத்தே இல்லாத அரிசியை நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களுமுண்டு. 

பாரம்பரியத் தானியங்களிலும் அரிசியிலும் இருக்கின்ற சத்துக்களை சிலர் ஒப்பீடும் பாணியே, பாரம்பரியத் தானியவகைகள் மட்டும் நம்மிடமிருந்திருந்தால் அல்லோபதி மருத்துவத்திற்கு அவசியமில்லாமல், புஜபல பாராக்கிரமத்தோடு, இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலருக்கு மரணமிலாப் பெருவாழ்வு சித்தித்திருக்குமென்று நம்மை ஏங்க வைப்பது மாதிரி இருக்கும். பாரம்பரியத் தானியவகைகள் சிறந்ததுதான். ஆனால் அதன் மறுபக்கம் பார்க்கத் தெரிந்தால்தான் நமது விவசாயிகள் அதை ஏன் விட்டுவிட நேர்ந்தது என்பது புரியவரும். 

கர்ணன் மாதிரி கவச குண்டலத்தோடு பிறக்க நாம் ஆசீர்வதிக்கப் படாவிட்டாலும், குறைந்த பட்சம் வரகோடு பிறக்கவாவது ஆசீர்வதிக்கப்ப்ட்டோமே என்று பலநேரங்களில் நான் திருப்திப் பட்டிருக்கின்றேன். என் சிறுவயதில் அதுதான் பிரதானம். கர்ணனிடமிருந்து நயவஞ்சகமாக கவச குண்டலத்தை பறித்த மாதிரி யாரும் சதி செய்து வரகை நம்மிடமிருந்து பிரிக்கவில்லை. மாறாக அது சற்று அவஸ்தையாக இருந்ததால் அதைச் சற்று ஒதுக்கி வைத்தார்கள். அவ்வளவுதான். . 

வரகு ஒரு அப்பிராணிப் பயிர்தான். அது சம்சாரியை எந்தவகையிலும் படுத்தாது. உழுது விதைத்தாலே, அது சம்சாரி தனக்கு கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரமென்று மகிழ்ந்து மகசூல் தந்துவிடும். வரகின் குணதத்தோடு ஒப்பிட்டால் நெல் அதற்கு நேரெதிர். அது ஒரு அகங்காரம் பிடித்த பயிர். அதை ஒரு “தொடுப்பை” பார்த்துக்கொள்வது மாதிரி பார்த்துக்கொள்ளவேண்டும். செலவழிக்க வேண்டும். கண்டுகொள்ள வேண்டும். பண்டுவம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் கோபித்துக்கொண்டு மகசூலில் ஏமாற்றிவிடும். வரகு ஏழை வீட்டுக் குமரி என்றால் நெல் பணக்கார வீட்டு குமரி.

வரகு காட்டிலிருக்கும் வரை ஏழைவீட்டுப் பெண்தான். ஆனால் வரகரிசியாக மாறும் போது, மாமியாருக்கு அடங்காத மருமகளாகிவிடும். வரகிலிருக்கும் அவஸ்தையே அதிலிருந்து அரிசியைப் பிரிப்பதுதான். நெல் மாதிரி மாங்குமாங்கென்று உலக்கையில் குத்தி உமியைப் பிரிக்கமுடியாது. .இப்பொழுது வரகிலிருந்து உமியைப் பிரிக்க இயந்திரங்கள் வந்திருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் வரகிலிருந்து அரிசியைப் பிரிக்க யுத்த முஸ்தீபுகள் அளவுக்கு சிலவற்றை முன்னெடுக்க வேண்டும். வரகைக் கல்திருகையில் போட்டு திரிக்க வேண்டும். கல்திருகைகள் பொதுவாக மாவரைக்கவென்றே வடிவமைக்கப்பட்டது. கசகசவென்று மாவரைக்கும் திருகைகளை வைத்துக்கொண்டு, சூதானமாக உமியைப் பிரிக்க திருகைகளைத் தயார்படுத்த வேண்டும். அகலமான திருகைகளைத் தேர்வு செய்து, திருகையின் அடிக்கல்லின் மேற்புறமும், மேல் கல்லின் கீழ்ப்புறமும், அதன் சுற்றளவிற்கு அளவாக சணல் சாக்கை வெட்டியெடுத்து, சாணிப்பால், செம்மண் மற்றும் சிலவற்றைக் கொண்டு பக்குவமாகத் தயாரித்த பசை கொண்டு சாக்கை ஒட்டி காயவைக்க வேண்டும். ரெம்ப தடிமனான சணல் சாக்குகள் தோதுப்படாது. சாக்கு தடிமனாக இருந்தால் திருகையைச் சுற்ற முடியாது. அளவான தடிமனில் கிடைக்கும் சாக்குகளை உஷாராக இருந்து சேர்த்து வைக்கவேண்டும். நெல் குத்துவது மாதிரி அப்பப்போ வரகைத் திரித்து அரிசியெடுப்பது இச்சலாத்தியான வேலை. ஒரு குடும்பத்திற்கு எழெட்டு மூடை வரகரிசி தேவைப்படும்பட்சத்தில் அதை ஒரேமூச்சில் ஒரு project மனோபாவத்துடன் செய்து முடிக்க வேண்டும். எழெட்டு திருகைகள் தயார்படுத்தி, அதில் ஒன்றிரண்டை ஸ்டெப்னியாக வைத்துக்கொண்டு, 4-5 பெண்களை வைத்து 8-10 நாட்கள் திரிக்கவேண்டும். வரகு திரிப்பது இடிப்பொடிக்கும், கைவலிக்கும் வேலை. அதற்கு யாரும் விரும்பி வரமாட்டார்கள். அவர்களைக் கவர குறைந்தபட்ச கவர்ச்சித் திட்டங்கள் (கடுங்காபியோ, கருவாட்டுக் குழம்புடன் கூடிய களியோ) மற்றும் வரகரிசியைக் கூலியாகக் கொடுக்கவேண்டும். வரகரிசி ஒரு கவர்ச்சி. அது வீட்டிலிருந்தால், அதைக் கூலியாகக் கொடுத்து வேலைக்கு ஆட்களை எளிதாகக் கவரலாம். 

இப்பொழுதெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டல் செப்கள் வரகரிசியில் விதவிதமான பண்டங்களை சமைக்க முடியும் என்று வித்தை காட்டுகிறார்கள். வரகரிசியில் சாதத்தைவிட வேறு எதையும் நான் சாப்பிடும் புண்ணியம் வாய்த்ததில்லை. ஒரு வேக்காடு கூடிவிட்டாலும் சாதம் குலைந்துவிடும். வரகு புழக்கத்திலிருந்த காலத்தில் அரிசியும் புழக்கத்தில் இருந்தது. நெல்தான் அகங்காரம் பிடித்த பயிர். ஆனால் அது அரிசியாகிவிட்ட அடுத்த கணம், director’s artist என்று சில நடிகைகளைக் குறிப்பிடும் மாதிரி, பெண்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். மாறாக பயிராக இருக்கும் வரைதான் வரகு அப்பிராணி. அது அரிசியாகி விட்டால் அது அடங்காபிடாரிதான். அரிசியில் விதவிதமான அயிட்டங்களை சமையலில் கத்துக்குட்டிகள் கூட செய்து அசத்தமுடியும். வரகரிசியில் நினைத்த மாதிரி வித்தை காட்ட முடியாது. அது அனுபவஸ்தர்களை வந்து பார் என்று கெக்கலி காட்டும். வரகைப் பிரபலப்படுத்தும் எண்ணத்தோடு அதில் இது செய்யலாம், அது செய்யலாம் என்று சொல்லப்படும் குறிப்புகள் எல்லாம் கைப்பக்குவம் மிக்கவர்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியப்படாது. பிறந்த வீட்டில் நல்ல மகளாக இருந்து, புகுந்த வீட்டில் அடங்காபிடாரி மருமகளாவது போலத்தான் இது. இந்த அடங்காபிடாரித்தனம், அரிசியைத் தவிர, நாம் போற்றும் பிற சிறு தானிய வகைகளுக்கு உண்டு. சதிசெய்து யாரும் அரிசியைக் கொலுவில் ஏற்றவில்லை. நம்முடைய தாய்மார்களின் விருப்பதிற்கேற்ப அரிசி வளைந்து கொடுத்த தன்மைதான், அதனுடைய பணிவுதான் அதை முதல் இடத்திற்கு உயர்த்தி இருக்க வேண்டும். 

வரகின் மகிமையைப் பற்றி யார் பேசினாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். காரணம் வரகோடு சம்பந்தப்ப்ட்ட ஒரு ஜோக்கால். வரகு திரிப்பதில் உள்ள அவஸ்தையைச் சொல்லும் ஜோக் அது. 

ஒரு கிராம பள்ளிக்கூட வாத்திக்கு தன்னிடம் படிக்கும் மாணவனின் தாயின் மீது ஒரு “கிறுக்கு”. அந்தப் பையன் மூலம் அவனின் அம்மாவிடம் “பழக” நினைத்து, அவனிடம் பிரியம் காட்டுகிறார். அந்தம்மாவும் வாத்தியைப் பார்த்தால் சிரித்துவிட்டுச் செல்வார். இது போதாதா? ஒருநாள் வாத்தியே, “சிரிச்சா மட்டும் போதுமா, வீட்டுக்கு கூப்பிடமாட்டீங்களா? என்று கேட்டே விடுகின்றார். அதற்கு அந்தப் பையனின் தாயும், “பையானோட அப்பா ஊரில் இல்லாத நாள் பார்த்து பையனிடம் சொல்லி அனுப்புவதாக” கூறிச்செல்ல, வாத்தி அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றார். அந்த நாளும் வந்தது. பையனே வாத்தியிடம் வந்து, “சார்! நாளைக்கு விடிஞ்சதும் எங்கம்மா உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. காலை காபி, சாப்பாடு, மதியச் சாப்பாடு எல்லாமே எங்க வீட்டில்தானென்று உங்ககிட்டே சொல்லச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். வாத்திக்கோ உற்சாகத்தில் இரவெல்லாம் உறக்கமில்லை. எப்பொழுது விடியும் என்று காத்திருந்து, விடிந்ததும் பையனின் வீட்டிற்கு செல்கிறார். வாத்திக்கு காபி கொடுத்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த போது, “ஊருக்குப் போன அப்பா வந்துகொண்டிருப்பதாக” பையன் மூச்சிறைக்க ஓடிவந்து சொல்கின்றான். 

‘ஊருக்குப் போனவரு திரும்பி வார நாலைந்து நாளாகும்’ என்று சொன்னதால்தான் இன்னைக்கு உங்களை வரச்சொன்னேன்.. அய்யோ அவரு கோபக்காரராச்சே உங்களை இங்க பார்த்தா, வேறு வினையே வேண்டாம்” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே, ‘பிரியமாக வந்துட்டீங்க .நீங்க பொக்குன்னு போயிடக்கூடாது’, எனக்கு ஒரு யோசனை தோணுது அதன்படி செய்யமுடியுமா? என்று கேட்க, வாத்தியும் ‘உங்கூட இருக்கிறதுக்கு எதையும் செய்யத் தயார் என்று ஜொள் விடுகிறார். “ஒரு கிழவியை வைத்து நாலைந்து நாட்களாக வரகு திரிப்பது எம் புருசனுக்குத் தெரியும். உங்க மேலே ஒரு சேலையை போத்தி விடுறேன். திருகைக்கு முன்னாடி உட்கார்ந்து கொஞ்சநேரம் வரகு திரியுங்கள். அவரை எப்படியாச்சும் தாக்காட்டி வெளியே அனுப்பிச்சிடறேன்” என்று சொல்ல வாத்தியும் உற்சாகமாக வரகு திரிக்க ஆரம்பிக்கிறார். 

வீட்டுக்கு வந்த புருசனும் வீட்டுக்குள் வராமல், வரகு திரிப்பதை பார்த்துக்கொண்டு வெளியே உட்கார்ந்து கொள்கிறான். “நான் போய் கவுச்சியும், முட்டையும் வாங்கி வாறேன்” என்று வாத்திக்கு கேட்கும்படி புருசனிடம் சத்தமாகச் சொல்ல, வாத்தி அது நமக்குத்தான் என்று நினைத்து திருகை சுற்றுவதை வேகப்படுத்துகிறார். வெளியே போய்விட்டு வந்த பெண்டாட்டி, ‘”கொஞ்சம் பொருத்துக்குங்க. வேகமாச் சமைச்சி, வெந்தும் வேகாமலும் ஒரு நாலுதுண்டு கரியைப் போட்டு அவரை வெளியே பத்திவிடுறேன்’ என்று வாத்தி காதில் கிசுகிசுத்துவிட்டு சமைக்க ஆரம்பிக்கிறார். சமைத்து புருசனும் பொண்டாட்டியும் சாப்பிடுகிறார்கள். வாத்திக்கு கேப்பைக்கூழ் கொடுத்துக்கொண்டே, ‘கொஞ்சம் பொருத்துக்குங்க அவரை இப்ப அனுப்பிச்சிறேன்’ என்று மீண்டும் வாத்தியிடம் கொஞ்சலாக கிசுகிசுத்து செல்கிறார். நேரம் போனதுதான். புருஷன் போனமாதிரி தெரியவில்லை. புருஷன் வெளியே உட்கார்ந்துகொண்டு வரகு திரிப்பதையே பார்த்துக்கொண்டிருக்கின்றான். மாலை நெருங்கி விளக்கு வைக்கும் நேரம். “மூணாளு திரிக்கிற வரகை இன்னைக்கு கிழவி ஒத்தை ஆளா திரிச்சிருச்சி. அவளுக்கு காபித் தண்ணி ஏதாச்சும் குடு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான், பொண்டாட்டியும் “சே! வந்த மனுஷன் இப்படியா ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்துக்கிடுவாறு. விளக்கு வைக்கிற நேரமாச்சு. நீங்க புறப்படுங்க. இன்னொரு நாள் பையங்கிட்டே சொல்லி அனுப்புறேன் என்று சொல்ல, உடம்பெல்லாம் ஒரே தூசு. கைகால் அலம்பிட்டு போறேன் என்று தட்டி மறைவிற்கு வாத்தி செல்கிறார். 

காலையிலிருந்து வீட்டில் இல்லாத பையன் அப்பொழுது ஓடிவருகின்றான். “உங்க வாத்தி இன்னைக்கு மூணு மூடை வரகை ஒத்தை ஆளா திரிச்சிட்டாறு. அம்மா கரிக்கொழம்பு வச்சிருக்கா. வீட்டுக்கு போன்னு அப்பா சொன்னாரும்மா” என்று சொன்னது முகம் கழுவிக்கொண்டிருந்த வாத்தி காதில் விழுகிறது. முழுக் குடும்பமும் ஒண்ணாச் சேர்ந்து தனக்கு கோமாளிப் பட்டம் கட்டியதை தெரிந்து நொந்து போய் வெளியேறுகிறார்.

இது தெரியாதா பையன் ஒருவாரம் கழித்து வாத்தியிடம், “அப்பா ஊர்லே இல்லையாம். அம்மா உங்களை வீட்டுப் பக்கம் வந்து போகச் சொன்னாங்க” என்று சொல்ல, வாத்தி அந்தப் பையனை கையெடுத்து கும்பிட்டு, “சாமீ!உங்க வீட்ல நாள் பூரா உக்காந்து வரகு திரிக்க எம் ஓடம்புல தெம்பில்லை. இதை உங்க அம்மாகிட்டே சொல்லீறு” என்று முடித்துக்கொள்கிறார். 

Friday, 15 November 2013

வாழ்க்கையின் ரகசியம்

''சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’ 

அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. 

ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான். 

ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!''

Friday, 4 October 2013

துபாய் கணவா....

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒருகையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு..
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

இல்லையேல் விவாக ரத்துசெய்து விட்டு போ

Friday, 30 August 2013

தேங்காய்

பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :

தேங்காய் :

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய்ப் பால் :

உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.  குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். 

தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் : 

நாள்பட்ட தீராத புண்களுக்கு மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்கு வெப்பாலைத் தைலம், பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம்.

இளநீர் :

இளநீர் மிக மிகச் சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இதன் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப்பொருள்களும் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

தென்னம் பூ :

வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க தென்னம் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

தென்னை வேர் :

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.

தென்னங்குருத்து :

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

Friday, 23 August 2013

ஆயிரம் கரங்கள் நீட்டி


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

காலத்தை வென்று சரித்திரங்கள் பல படைத்த "கர்ணன்" திரைப்படத்தின் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடலை விரும்பாதோர் தமிழரே இல்லை எனலாம்.

இயற்கையின் தாயான கதிரவனைப் பற்றிய பாடலாதலால் அனைத்து மதத்தவராலும் ரசிக்கப்படுகிறது.

T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலக ச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடி, இனி இப்படி ஒரு பாடல் உலக வரலாற்றிலேயே அமையாது என்று எண்ணும் அளவுக்கு புகழ் பெற்றது.

இதனை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் லயிக்கும்; உடல் சிலிர்க்கும்; கண்கள் பனிக்கும்.

இந்த பாடலை தேடிக்கொண்டிருப்போர் பலர் இருப்பார்கள். ஆகவே youtube video link : http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU mp3 link : http://tamildada.com/karnan-songs/ பாடல் வரிகள் ஆகியவற்றை தமிழன் என்ற பெருமையுடன் பகிர்கின்றேன்.

Thursday, 22 August 2013

CHEPAUK PALACE

CHEPAUK PALACE, that genesis of the Indo-Saracenic School of architecture, is impossible to be seen in its handsome entirety today, hidden as it is by the buildings that have come up around it. Even its vast grounds are no longer visible, Chepauk Park is but a sad memory. And this sad stage of affairs is not wholly due to present-day development; it began when the `Government' of the time took over the palace and park 150 years ago.



 When Mohammed Ali Wallajah, friend of the British, died, he was succeeded as the Nawab of Carnatic by his son Umdat-ul-Umrah, no favourite of the Council in Fort. St. George. Accusing him of having conspired with Tippu Sultan during the Fourth Mysore War, Lord Edward Clive sent his soldiers in to occupy the palace in 1801, annexed the Carnatic in consequence of the settlement of the Carnatic debts and reduced the Nawabocracy to a Titular Nawabship. When the last Titular Nawab, Ghulam Ghouse Khan Bahadur, died in 1855, the British decided to make its occupancy of the palace permanent by moving out of it, its chief occupant, thereafter to be known as the Prince of Arcot. After a series of moves, Amir Mahal became the home of the successive Princes of Arcot, who from 1868 began receiving a pension from the Government, various tax exemptions and the maintenance costs of their new home. These obligations are still met by the Government of India, honouring the agreements of the Victoria era, as they do for three other princes as well, those of Tanjore, Calicut and Oudh.

 With Chepauk Palace now vacant, the Madras Government decided to legitimise its occupancy by putting up the property for sale in 1859. When Government was the only party that could meet the minimum asking price, it took over the ownership of Chepauk Palace and its host of outbuildings, Marine Villa by the Cooum and their 117 acres for Rs. 5.8 lakhs. And into the palace it moved several Government offices, beginning the process of decline.