Tuesday 2 August 2011

சிவாஜி செய்தது ஓவர் ஆக்டிங்கா?

80 வயதான ஒரு முதிய இசைக்கலைஞர் நடிகர் திலகம் ஓவர் ஆக்டிங் என்ற குற்றச்சாட்டை சொன்னபோது சொன்னார் . . "தம்பி நாங்க அந்தக்காலத்துல ஊர் ஊரா போய் டிராமா போடுவோம். அப்போவெல்லாம் இந்த மாதிரி போகஸ் லைட்லாம் கிடையாது. பல ஊர்களில் மின்சாசம் கூட நாங்க டெண்ட் போடும் இடத்தில் இருக்காது. பலநேரங்களில் தீவட்டி அல்லது பெட்ரோமாக்ஸ் லைட்டிலேயே நடக்கும். அப்போ நாம் சிரிப்பது அழுவது என்று எல்லாவற்றையும் அந்த குறைந்த வெளிச்சத்தில் தூரத்தில் நிற்பவருக்குகூட தெரியுமாறு காட்டவேண்டும் ! மேலும் சத்தம் போட்டுத்தான் பேசவேண்டும், கடைசி வரிசைக்காரருக்கு கேக்குறமாதிரி. இதெல்லாம் திரைக்கும் அப்படியே தொட்டில்பழக்கம் மாதிரி வந்துருச்சு. டப்பிங்,போக்கஸ் வெளிச்சம், சூம் லென்ஸ் நு இருக்கிற இன்றைய தலைமுறைக்கு எங்க கஷ்டம்லாம் என்னன்னே தெரியாது ! புரியாது ! குறைகண்டுபுடிக்க அந்தக்கால பாட்டாளிகளான நாங்கள் தான் கிடைச்சோமா ? உங்களுக்கு புரியனும்னா இன்றைய டிஜிட்டல் தலைமுறை கிட்ட  ஒரே ஒரு 120, 64 asa கருப்புவெள்ளை பிலிம் மூலம் முகம் பளிச்சுனு வர்ரமாதிரி பிளாஷ் லைட் இல்லாம ஒரு போட்டோ எடுக்கச்சொல்லுங்க.. பார்க்கலாம் . . அப்புறம் தெரியும் எங்க கஷ்டமும், ஓவர் மேக்கப் மற்றும் ஓவர் ஆக்டிங் ன் அந்தக்கால தேவையும் "... என்று . . . எனக்கும் பளிச் சென்று புரிந்தது ! உங்களுக்கு?

No comments:

Post a Comment