Saturday 23 February 2013

கவிஞர் சல்மா




இயற்பெயர் ராஜாத்தி(எ) ரொக்கையா. வயது 42. திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு சமூகத்தில் பிறந்த இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அவர் முதல் கவிதை அங்குதான் பிறந்தது.

நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணிப் பெண் படைப்பாளி. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்ட வாழ்க்கையும், அதனுள்ளிருந்து கசிந்துருகும் தனிமையும்தான் இவரது கவிதைகள்.

தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிவருகிறார். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (கவிதைகள் - 2000) இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் - 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஹிந்தி ,ஸ்பானிஷ் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கின்றது.

இந்த வருடத்தில் இரண்டு கவிதைத்தொகுப்புக்களும் ஒரு சிறு கவிதைத் தொகுப்பும் வெளிவர இருக்கின்றது. ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் இடம்பெற்றிருந்தது.ஆனால் தேர்வு பெறும் வாய்ப்பினைப்பெறவில்லை.

அரசியலிலும் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் அடைந்துள்ளார். உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு முதன்முதலாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதனால் இவர் அரசியலுக்கு வர முடிந்தது. 2001 முதல் 2006 வரை இவரது கிராமமான துவரங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். உள்ளாட்சி நிர்வாகத்தில் தனது கிராமத்தை சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின்பு தன்னை திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றார். 2006 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதிக்கு போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டார்.

தற்போது தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் தலைவியாக இருக்கும் பொழுது பெண் கருவைப்பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அது போக இந்திய துணை ஜனாதிபதியின் மனைவி சல்மா அன்சாரி தலைவியாக உள்ள துர்காபாய் தேஷ்முக் விருதுக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.

http://www.poetsalma.com

No comments:

Post a Comment